chat

Thursday, September 27, 2012

கவிச்சோலை - 27-செப்டம்பர்-2012

நேரம் நேர
27-செப்டம்பர்-2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்.




KANJANASUGI :
ஆர்ப்பாட்டம், அமைதி என்று இருந்த
எங்களை நீ விரட்டி விட்டாய் ..!
ஆனால் இதுவே எங்களுக்கு ஒரு துவக்கம் ..!!
கலகலப்பு அரட்டை மூலம் ...!
இனி எங்களின் துவக்கம்..
உனக்கு எச்சரிக்கை..!
இது கவிச்சோலைக்கு
முதல்கவிதை..!

======================================================

SANTHIYA :
நம்பிக்கை வாழ்கையின் துவக்கம்..!
இறப்பு பிறப்பின் துவக்கம்...!
இரவு விடியலின் துவக்கம்...!
மழை வசந்தத்தின் துவக்கம்...!
நம் அனைவரின் ஒற்றுமை
வெற்றியின் துவக்கம்..!

======================================================

RAMYA
ஒன்றின் முடிவில் மற்றொன்று துவக்கம் !
துவக்கம் என்பது மகிழ்ச்சி !
முடிவு என்பது துயரம் !
துயரக்கடலை மகிழ்ச்சி அலைகள்
அடித்துச் சென்றுவிடும் ...
துவக்கம் என்பதும் துயரத்தை
துடைத்து மகிழ்ச்சியை உருவாக்கிவிடும்...
ஆனால் ஒவ்வொரு துவக்கத்திற்கு பின்னாலும்
ஓர் இதயம் துயரமாய் துடித்துக் கொண்டிருக்கும்
என்பது தான் நிதர்சன உண்மை...!

======================================================

RAAJJ
ஈரைந்து மாதத்தில் துவங்கிய
நம் பயணம்
இன்று வரையில்...!!

என்ன செய்துவிட்டோம் வாழ்க்கையில்
எனும் உணர்வு
எண்ணத்திரையில்.....!!

ஒரு பக்கம் இறுமாப்பு....
ஒரு பக்கம் பொல்லாப்பு !!

பேச்சின் துவக்கம் மழலை வடிவில்.....பின்பு
படிப்பினை துவக்கம் பள்ளியின் வழியில்....!!

காதலின் துவக்கம் பருவ வயதில்.....பின்பு
கடமைகள் துவக்கம் குடும்ப வழியில்....!!

இத்தனை துவக்கங்கள் ஒன்றுசேர்ந்து
முற்றுகை இடும்.....!

அவ்வப்போது நம் சுயநலத்தில்.....மானுடத்தை
மிதித்துவிட்டோம் என்ற
உண்மை சுடும்......!!

முதல் மனிதனை படைத்து இறைவன்
செய்த துவக்கம்.......

இன்று.......

அவனையும் மீறி செல்கிறது....அழிவின் பாதை நோக்கி !

முதல் பாவத்தை செய்து மனிதன்
கண்ட துவக்கம்.......

இன்று......

எப்போதுமே நியாயபடுத்தப்படுகிறது.....

இதயங்களில் அழுக்கை தேக்கி!!

இனியேனும்......துவங்குவோம் சரியாக
மழலைக்கு மனிதத்தை புகட்டி.....
வாலிபருக்கு வாழ்வினை காட்டி.....
மூளையினால் மட்டுமே யோசிக்காமல்.....கொஞ்சம்
இதயத்திலும் சிந்தனையை ஊட்டி......!!

இன்றிலிருந்து நம் துவக்கம்.....கொள்வோம் !!
ஈரத்தால் இதயங்கள் வெல்வோம் !!

வென்றால் இந்த பூமி நமக்கு இனிய வீடு.....
இல்லையேல்......
வாழாமல் ஜீவித்திருக்கும் இவ்விடத்தின் பெயர்
சுடுகாடு....!!

======================================================

VEERA :
விடியலின் துவக்கம் இருளிலிருந்து !
இன்பத்தின் துவக்கம் வேதனையிலிருந்து !!
கலகலப்பின் துவக்கம் புறக்கணிப்பில் இருந்து !!!
இருளும் வலியும் இனியில்லை...
புறக்கணிப்பு என்றும் நிலையில்லை...
எல்லாம் வல்லோனின் அருளுக்கும் குறைவில்லை...
இனியிங்கு கலகலப்பிற்கும் பஞ்சமில்லை...
எல்லா புகழும் இறைவனுக்கே !!

======================================================

GREEN TAMIZHAN :
நாம் வாழ்க்கையில் கற்கும் அனைத்துமே ஒரு துவக்கம் தான் ..
இம்மண்ணில் பிறந்தது வாழ்வதற்கான துவக்கம்..!
அம்மா என்றழைப்பது பேச்சின் துவக்கம் ..!!
கற்கும் பாடம் வாழ்கையை பற்றி அறிவதற்கான  துவக்கம் ..!
வாழ்க்கையில் ஏற்படும் நட்பு , காதல்,
நட்பிற்கும் அன்பிற்கும் ஏற்பட்ட துவக்கம் ..!
இந்த அரட்டை அறை ஆரம்பிக்கும் முன்
மசாலா கபே குழுமமும்  இதற்கான ஒரு துவக்கமே ..!
எனது கவிதைக்கு பின் நண்பர்களின் கவிதையை
நீங்கள் வாசிப்பதும் அடுத்ததொரு துவக்கமே..!

======================================================
MASALAMAN :
காதலின் துவக்கம் கண்கள்
தொடங்கிய கலவரத்தில்
அரசியல் செய்துவிட்டது
இதயம் !
======================================================

NEW_DUST :
கண்ணீரே துவக்கம்,
சில சமயம் சோகத்திற்கு,
பல சமயம் புதிய வேகத்திற்கு !!
சோகம் கண்ணில்
விதிக்கப்பட்டால்,
அது கண்ணீரில் முடியும் !!
அதுவே மனதில்
விதைக்கபட்டால்,
வெற்றி பூக்களாய் மலரும் !!
பூமியில் வேர்களாய் துவங்கி,
விண்ணில் ஒளிரும்
வெற்றியின் வெளிச்சம் !!

======================================================

ARUNESH
அனைத்து சோகங்களையும்
தூக்கி எறிந்து ஒரு விடியலின்
துவக்கம் இது..!
வலிகள் அனைத்தையும் முடக்கி
உனக்கே உரமாக்கும் துவக்கம் இது..!
சோதனைகளையும் ,வேதனைகளையும்
சாதனைகளாக்கும் துவக்கம் இது..!
திசைமாறும் காலமிது..!
திருப்புமுனை நேரமிது..!!

======================================================

PATTASU
1) கட்டுக்கடங்கா காட்டு வெள்ளத்தின்
தொடக்கம் மழைத்துளிகளே..!
செந்நிற காட்டுதீயின் தொடக்கம்
சின்ன தீப்பொறி...!
பிரிதலின் தொடக்கம் புரிதல்
இல்லா சிறிய விரிசல்..!
அன்பில் தொடங்கி,
நட்பை பாராட்டி ,
பாசத்தை பகிர்ந்து,
நாம் மகிழ்வோம்..!
மற்றவரை மகிழ்விப்போம்..!!

2) விழியில் துவங்கி,
இதயத்தில் மலர்ந்து ,
கரங்கள் கோர்த்து ,
உலகை மறந்து ,
காதல் உலகில் ,
சிறகடித்து பறந்து ,
திக்கு தெரியாமல்
கல்லறையில் புதைந்தது..!

======================================================

ROUTER
மின் ஏற்றியின் துவக்கம்
ஏணியின் இறக்கம்.

மின்சாரத்தின் இறக்கம்
ஏணியின் ஏற்றம்.

துவக்கமும் முடிவும்
நிலையல்ல,
சுழற்சியே...!

======================================================

NISHAA
தாயின் கருவறையில் வாழ்கை துவக்கத்தை தொடங்கி ..!
தந்தையின் கை பிடித்து நடக்க தொடங்கி..!!
வயதாக நடக்க இன்னொரு துவக்கத்தை துணை தேடி,
இறப்பு என்னும் முடிவறையை நோக்கி பயணிக்கிறோம் ..

======================================================

AIRTEL
பிறரின் ஊக்கமே நமது வாழ்வின் துவக்கம் ..!
திருமணம் மனிதனின் புதிய வாழ்வின் துவக்கம் ...!!

======================================================

ANBUAKKA
வானில் சிவந்த கோடுகள்
முகிலிடையே எட்டிப் பார்க்கும் சூரியன்
இது நாளின் துவக்கம்
காரிருள் சூழும் நேரம்
தண்ணிலவின் தலை காட்டல்
இது இரவின் துவக்கம்
குழந்தையின் ஜனனம்
வாழ்வின் துவக்கம்
தடுமாறி விழுவது நடையின் துவக்கம்
ஒலிகள் எல்லாம் மொழியின் துவக்கம்
உணர்வுகள் எல்லாம் உயிரின் துவக்கம்
புரிதல் என்பது நட்பின் துவக்கம்
போற்றுதல் என்பது அதனுள் அடக்கம்
கலகலப்பு என்பது் மகிழ்வின் துவக்கம்
கூடி மகிஷ்வது நம் அனைவரின் பழக்கம்
காலம் நம்மைப் பிரித்தாலும்
கலகலப்பு நம்மைப் பிரியாது
சோகமாக நூறு ஆண்டுகள் வாழாமல்
மகிஷ்ச்சியாக ஒரு மணித்துளி வாழ்வது சிறப்பு
மனிதநேயத்தோடு மக்களுக்கு பனி செய்ய
கூடி மகிஷ்ந்திட, கொண்டாட்டம் நிறைந்திட
நட்பு வட்டத்தில் இணைந்திட நாமெல்லாம்
கலகலப்பு இணையத்தில் இணைந்திட்டதே நமக்கு
நல்ல துவக்கம் தானே

3 comments:

  1. அருமை அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  2. ஆரம்ப நிகழ்ச்சியை
    அருமையாக
    துவக்கும் விதத்தில்
    கவிதை
    படைத்த அனைத்து
    நண்பர்களுக்கும்
    வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  3. நம் குழுமத்தில் கவிதைக்கும் பஞ்சமில்லை....நல்ல
    கருத்துக்களுக்கும் குறைவில்லை ....

    அத்தனையும் முத்துக்கள்....மாலையாக கோர்த்த கலகலப்பு தளத்திற்கு
    என் மனமார்ந்த பாராட்டுக்கள் !!

    ReplyDelete