04-அக்டோபர் -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில்
இலக்கு என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்.

PATTAASU :
1) முகக்கண்ணில் இருள்
சூழ்திருந்தாலும்,
அகக்கண் வெளிச்சம்,
தெளிவான வழி காண்பிக்க,
இலக்கை அடைகின்றனர்..
பார்வையற்றோர்..!
2) எட்டி பிடிக்கும் தூரத்தில் இலக்கு,
மாய மானாக இருக்குமோ?
கிடைத்துவிட்டது இலகுவாக இலக்கு,
கனவாக இருக்குமோ?
அருகில் தான் இருக்கிறது இலக்கு,
கானல் நீராக இருக்குமோ?
என்றும் எளிதில் கிடைக்காது இலக்கு...!
புதுமையான எண்ணங்கள்
உயர்வான குறிக்கோள்கள்
துவளாத முயற்சிகள்
தளராத உள்ளங்கள்
அனைத்தோடு ஒற்றுமையும் இணைத்து
வலுவோடு
இலக்கை அடையவேண்டும்..!
3) விதையின் இலக்கு
வானமோ ..!
என்று
எண்ணத்தோன்றும்,
அது பூமியை
துளைத்து
துளிர்விட்டு நிற்கும் பொழுது..!
======================================================
NEW DUST :
1) வெற்றியின் புன்னகை.,
ஆயிரம் கண்ணீர் துளியின் நிழல் !!
அழகான சிற்பத்தின் செழுமை,
சிற்பி உடைத்த பாறைகளின் அழுகை !!
தோற்பது பலமுறை என்பது.,
வெற்றியின் மிக அருகாமை !!
தோல்விகளை படிகளாய் மாற்றி துவக்கு !!
வெற்றி கனி பறிப்பதே நமது இலக்கு !!
======================================================
KARTHIS :
கூர்மையான விடயங்களை
நேர்மையாகவும்
வலிய கருத்துக்களை
எளிமையாகவும்
உரைத்துப்பார்
இலக்கு - உன்னை நோக்கி
ஈர்க்கப்படும்.
======================================================
ARUNESH
இலக்கை எட்டி விட்ட
இடத்தில் நின்று
தன்னிலை மறப்பதும்..!
தற்புகழ்ச்சி கொள்வதும்..!
தான் என்ற பெருமிதம் பேசுதலும்.!
விடியலை கண்டு கூவும் சேவலுக்கு சமம் .
என்றுமே விடிவதற்கு தான் காரணமில்லை
என சேவலுக்கு தெரிய போவதில்லை ...!
நீ சென்ற உயரம்
சேர்க்கலாம் ஊக்கம்..!
ஆனால் அதுவே
கொடுக்குமா தலைக்கனம்?
இது பறந்து விரிந்த உலகம்
உணர்வது முக்கியம்..
வெற்றியின் கிறக்கம்
உனை வீழவும் வைக்கும்...!
இன்னும் எவ்வளவு காலம் தான்
இப்படி ஏந்தியே நிற்போம்?
தடைகற்களை படிக்கட்டுகளாய் பாவித்து
வெற்றி என்னும் இலக்கை நாங்கள்அடைவதற்குள்
வெற்றியே எங்களை இலக்காய் கொள்ளும்..!
======================================================
RAMYA :
நம் வாழ்க்கை எதை நோக்கி போகிறது ?
வாழ்கையில் எதை அடைய இத்தனை போராட்டம்?
உன்னுடைய இலக்கு தான் என்ன ?
அது எங்கே இருக்கிறது தெரியு மா?
உன் இதயத்தில் தான் அந்த இலக்கு
துடித்துக் கொண்டிருக்கிறது ?
இதயம் எப்படி உறங்காமல் துடிக்கிறதோ ..
அப்படி நீயும் உறங்காமல் செயல்பட்டால் தான்
உன் இலக்கை அடைய முடியும் ....
இலக்கு என்பது தெளிவாக இருந்தால் - உன்
வாழ்க்கை நிச்சயம் இலட்சிய வாழ்க்கையாக இருக்கும
போராடு உன் இலக்கை அடையும் வரை ...
======================================================
ANBUSELVI AKKA :
பத்தோடு பதினொன்றாக பாரில் வாழாமல்,
ஆயிரத்தில் ஒருவராக சாதிக்கப் பிறந்தவர் நாம்..
அதற்குத் தேவை இலக்கு..!
நோக்கம் இல்லாத செயலெதுவும்,
முழுமையாக நிறைவேறாது.
ஆக்கம் அதனில் பெற தேவை இலக்கு..!
வானில் செலுத்தும் செயற்கை கோளுக்கும்,
வில்லிலிருந்து புறப்படும் அம்புக்கும் மட்டுமா,
தேவைபடுகிறது இலக்கு..
வாழ்வின் பாதை செம்மையுற சாதனைகளைப் புரிய
சாமானியனுக்கும் தேவைப்படுவது..!
நாளைய விஞ்ஞானி நம் மகனின் இலக்கு..!
நல்ல மருத்துவர் நம் மகளின் இலக்கு..!!
விண்வெளி ஆய்வு வேதியியல் புதுமை
பொருளாதார உயர்வு போதைப் பொருள் தடுப்பு
புதிய தொலைவுணர்வு செயற்கைக்கோள்
பூமியுனுள் ஏற்படும் மாற்றங்கள்
சுற்றுசூழல் ஆய்வு அலைகடல் ஆராய்ச்சி,
உயிரின பாதுகாப்பு ஆன்மீக சிந்தனை
அனைத்து துறைகளிலும் நம்மவரின் பங்களிப்பு
நாளைய வல்லரசு நம் இந்தியா எனும் கனவு
அனைத்தையும் பெறுவதே ..
நம் இலக்காக இருப்பதனால்
கடனே என வேலை செய்யாமல்
கடமையாக கருத்தூன்றி வேலை செய்து
நாளைய நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே
நம் அனைவரின் இலக்காகக் கொள்வோம்..!
======================================================
SANGEET7 :
விண்ணில் சிறகுவிரித்து பறப்பது
சிறு பறவையின் இலக்கு ..!
மண்ணில் வேர்விட்டு துளிர்ப்பது
ஒரு செடியின் இலக்கு ...!!
வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னேறுவது
அது மனிதனின் இலக்கு ..!!!
======================================================
ROWTHIRAN :
தனக்கென ஒரு கூடு வேண்டும்..!
என்ற இலக்கை கொண்ட குருவியின்..
கடின உழைப்பால் கட்டியது கூடு ..!
அந்த கூட்டில் காகம்
தனது கற்ப காலத்தில் சென்று
முட்டை இட்டு
தனது சுயலாபத்திற்க்காக
அந்த குருவியின் கூட்டை பயன்படுத்துமாம்..!
இது குருவியின் ஏமாளித்தனமா..?
இல்லை காக்கையின் புத்திசாலிதனமா ..?
என்றால் குருவியின் ஏமாளித்தனமே..!
ஏன் என்றால் அதே காகம் தனது
அடுத்த கர்ப காலத்தில் முட்டையிட தேர்ந்தெடுப்பது ..
அதே குருவியின் கூட்டைத்தான் ..!
இலக்கை அடைவது முக்கியம் அல்ல ..
அதை அடைகாப்பதே அதனினும் முக்கியம் .!
======================================================
VEEKAY :
1) ஒரு நதி
தனக்கான பயணத்திற்கு
தானாக பாதை அமைக்கிறதே
அதுபோல அமையட்டும்
உனது பயணம்
ஒருமழைத்துளி
தான் வீழ்ந்து
பிறரை வாழ்விக்கிறதே
அதுபோன்று
அமையட்டும்
உனது வீழ்ச்சி
ஓர் எறும்பு
தன் தேவைக்கு
முன் எறும்பை
முட்டாது முன்னெறுகிறதே
அதுபோன்று அமையட்டும்
உனது ஏற்றம்
2) என்
கற்பனையின் சக்தி – எத்தனை
“ GB” தெரியவில்லை !
என்
வாழ்கையின் நீளம் - எத்தனை
“MB “ புரியவில்லை !
என்
செயல்களில் உண்மை -எத்தனை
“KG” விளங்கவில்லை !
என்
சிந்தனையில் இலச்சியத்தின் பங்கு – எத்தனை
“ டன்” கணக்கில்லை !
என்
இலச்சியத்தை நோக்கிய கனவுகள் -எத்தனை
“மில்லியன்” அளக்கவில்லை!
என்
கனவுகளை நிஜமாக்க
விடாமல் கட்டப்பட்டிருக்கும்
கயிறுகள் --- எத்தனை “ பில்லியன்”
இன்னும் ஒன்றை கூட அவிழ்க்கவில்லை!
3) நானொரு வெற்று காகிதம்தான்
என்றாலும் உன் கரம் பட்டு
காகித ஒடமானேன்!
அலைகளில்லா குளத்தில்
என்னை மிதக்கவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாயே!
இது நியாயமா?
ஓடம் ஓடவேண்டும்...
மூழ்கினாலும் கப்பல் அழகென்று
இந்த மானுடம் வர்ணிக்கிறதே!
அலைகள்தான் எங்களின் வாழ்கையை
நிலைப்படுத்தும் ஆயுதம்!
நங்கூரங்கள் கூட பலநேரம்
நம்பிக்கை இழக்கிறது!
நில அதிர்வுகளில் அலைகள்
அரக்க குணம் கொண்டழிக்கிறது!
எங்களுக்கு உறுதுணையாய்
உடன்வந்தாலும் .....
உனது உள்ளமதை நாமறிவோம்!
இலக்குகளின்றி பயணித்தலை
பாய்மரக்கப்பல்கள் அறிந்திருந்தாலும்
மாலுமியின் திறனறிந்து
பயணித்தலே எங்கள் நோக்கம்!
அடி பெண்ணே! உண்மையை சொல்லிவிடு...
சும்மா எங்களுடன் உறவாடாதே...!
உனது எண்ணத் திசைகளை நன்கறிவோம்...!
இனி காத்திருப்பு பயனில்லை...
இனிய பயணிப்பு நம்மோடு பூத்திருக்கு....
பயணிப்போம் இலக்கை நோக்கி!
இலக்கு என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்.

PATTAASU :
1) முகக்கண்ணில் இருள்
சூழ்திருந்தாலும்,
அகக்கண் வெளிச்சம்,
தெளிவான வழி காண்பிக்க,
இலக்கை அடைகின்றனர்..
பார்வையற்றோர்..!
2) எட்டி பிடிக்கும் தூரத்தில் இலக்கு,
மாய மானாக இருக்குமோ?
கிடைத்துவிட்டது இலகுவாக இலக்கு,
கனவாக இருக்குமோ?
அருகில் தான் இருக்கிறது இலக்கு,
கானல் நீராக இருக்குமோ?
என்றும் எளிதில் கிடைக்காது இலக்கு...!
புதுமையான எண்ணங்கள்
உயர்வான குறிக்கோள்கள்
துவளாத முயற்சிகள்
தளராத உள்ளங்கள்
அனைத்தோடு ஒற்றுமையும் இணைத்து
வலுவோடு
இலக்கை அடையவேண்டும்..!
3) விதையின் இலக்கு
வானமோ ..!
என்று
எண்ணத்தோன்றும்,
அது பூமியை
துளைத்து
துளிர்விட்டு நிற்கும் பொழுது..!
======================================================
NEW DUST :
1) வெற்றியின் புன்னகை.,
ஆயிரம் கண்ணீர் துளியின் நிழல் !!
அழகான சிற்பத்தின் செழுமை,
சிற்பி உடைத்த பாறைகளின் அழுகை !!
தோற்பது பலமுறை என்பது.,
வெற்றியின் மிக அருகாமை !!
தோல்விகளை படிகளாய் மாற்றி துவக்கு !!
வெற்றி கனி பறிப்பதே நமது இலக்கு !!
======================================================
KARTHIS :
கூர்மையான விடயங்களை
நேர்மையாகவும்
வலிய கருத்துக்களை
எளிமையாகவும்
உரைத்துப்பார்
இலக்கு - உன்னை நோக்கி
ஈர்க்கப்படும்.
======================================================
ARUNESH
இலக்கை எட்டி விட்ட
இடத்தில் நின்று
தன்னிலை மறப்பதும்..!
தற்புகழ்ச்சி கொள்வதும்..!
தான் என்ற பெருமிதம் பேசுதலும்.!
விடியலை கண்டு கூவும் சேவலுக்கு சமம் .
என்றுமே விடிவதற்கு தான் காரணமில்லை
என சேவலுக்கு தெரிய போவதில்லை ...!
நீ சென்ற உயரம்
சேர்க்கலாம் ஊக்கம்..!
ஆனால் அதுவே
கொடுக்குமா தலைக்கனம்?
இது பறந்து விரிந்த உலகம்
உணர்வது முக்கியம்..
வெற்றியின் கிறக்கம்
உனை வீழவும் வைக்கும்...!
இன்னும் எவ்வளவு காலம் தான்
இப்படி ஏந்தியே நிற்போம்?
தடைகற்களை படிக்கட்டுகளாய் பாவித்து
வெற்றி என்னும் இலக்கை நாங்கள்அடைவதற்குள்
வெற்றியே எங்களை இலக்காய் கொள்ளும்..!
======================================================
RAMYA :
நம் வாழ்க்கை எதை நோக்கி போகிறது ?
வாழ்கையில் எதை அடைய இத்தனை போராட்டம்?
உன்னுடைய இலக்கு தான் என்ன ?
அது எங்கே இருக்கிறது தெரியு மா?
உன் இதயத்தில் தான் அந்த இலக்கு
துடித்துக் கொண்டிருக்கிறது ?
இதயம் எப்படி உறங்காமல் துடிக்கிறதோ ..
அப்படி நீயும் உறங்காமல் செயல்பட்டால் தான்
உன் இலக்கை அடைய முடியும் ....
இலக்கு என்பது தெளிவாக இருந்தால் - உன்
வாழ்க்கை நிச்சயம் இலட்சிய வாழ்க்கையாக இருக்கும
போராடு உன் இலக்கை அடையும் வரை ...
======================================================
ANBUSELVI AKKA :
பத்தோடு பதினொன்றாக பாரில் வாழாமல்,
ஆயிரத்தில் ஒருவராக சாதிக்கப் பிறந்தவர் நாம்..
அதற்குத் தேவை இலக்கு..!
நோக்கம் இல்லாத செயலெதுவும்,
முழுமையாக நிறைவேறாது.
ஆக்கம் அதனில் பெற தேவை இலக்கு..!
வானில் செலுத்தும் செயற்கை கோளுக்கும்,
வில்லிலிருந்து புறப்படும் அம்புக்கும் மட்டுமா,
தேவைபடுகிறது இலக்கு..
வாழ்வின் பாதை செம்மையுற சாதனைகளைப் புரிய
சாமானியனுக்கும் தேவைப்படுவது..!
நாளைய விஞ்ஞானி நம் மகனின் இலக்கு..!
நல்ல மருத்துவர் நம் மகளின் இலக்கு..!!
விண்வெளி ஆய்வு வேதியியல் புதுமை
பொருளாதார உயர்வு போதைப் பொருள் தடுப்பு
புதிய தொலைவுணர்வு செயற்கைக்கோள்
பூமியுனுள் ஏற்படும் மாற்றங்கள்
சுற்றுசூழல் ஆய்வு அலைகடல் ஆராய்ச்சி,
உயிரின பாதுகாப்பு ஆன்மீக சிந்தனை
அனைத்து துறைகளிலும் நம்மவரின் பங்களிப்பு
நாளைய வல்லரசு நம் இந்தியா எனும் கனவு
அனைத்தையும் பெறுவதே ..
நம் இலக்காக இருப்பதனால்
கடனே என வேலை செய்யாமல்
கடமையாக கருத்தூன்றி வேலை செய்து
நாளைய நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே
நம் அனைவரின் இலக்காகக் கொள்வோம்..!
======================================================
SANGEET7 :
விண்ணில் சிறகுவிரித்து பறப்பது
சிறு பறவையின் இலக்கு ..!
மண்ணில் வேர்விட்டு துளிர்ப்பது
ஒரு செடியின் இலக்கு ...!!
வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னேறுவது
அது மனிதனின் இலக்கு ..!!!
======================================================
ROWTHIRAN :
தனக்கென ஒரு கூடு வேண்டும்..!
என்ற இலக்கை கொண்ட குருவியின்..
கடின உழைப்பால் கட்டியது கூடு ..!
அந்த கூட்டில் காகம்
தனது கற்ப காலத்தில் சென்று
முட்டை இட்டு
தனது சுயலாபத்திற்க்காக
அந்த குருவியின் கூட்டை பயன்படுத்துமாம்..!
இது குருவியின் ஏமாளித்தனமா..?
இல்லை காக்கையின் புத்திசாலிதனமா ..?
என்றால் குருவியின் ஏமாளித்தனமே..!
ஏன் என்றால் அதே காகம் தனது
அடுத்த கர்ப காலத்தில் முட்டையிட தேர்ந்தெடுப்பது ..
அதே குருவியின் கூட்டைத்தான் ..!
இலக்கை அடைவது முக்கியம் அல்ல ..
அதை அடைகாப்பதே அதனினும் முக்கியம் .!
======================================================
VEEKAY :
1) ஒரு நதி
தனக்கான பயணத்திற்கு
தானாக பாதை அமைக்கிறதே
அதுபோல அமையட்டும்
உனது பயணம்
ஒருமழைத்துளி
தான் வீழ்ந்து
பிறரை வாழ்விக்கிறதே
அதுபோன்று
அமையட்டும்
உனது வீழ்ச்சி
ஓர் எறும்பு
தன் தேவைக்கு
முன் எறும்பை
முட்டாது முன்னெறுகிறதே
அதுபோன்று அமையட்டும்
உனது ஏற்றம்
2) என்
கற்பனையின் சக்தி – எத்தனை
“ GB” தெரியவில்லை !
என்
வாழ்கையின் நீளம் - எத்தனை
“MB “ புரியவில்லை !
என்
செயல்களில் உண்மை -எத்தனை
“KG” விளங்கவில்லை !
என்
சிந்தனையில் இலச்சியத்தின் பங்கு – எத்தனை
“ டன்” கணக்கில்லை !
என்
இலச்சியத்தை நோக்கிய கனவுகள் -எத்தனை
“மில்லியன்” அளக்கவில்லை!
என்
கனவுகளை நிஜமாக்க
விடாமல் கட்டப்பட்டிருக்கும்
கயிறுகள் --- எத்தனை “ பில்லியன்”
இன்னும் ஒன்றை கூட அவிழ்க்கவில்லை!
3) நானொரு வெற்று காகிதம்தான்
என்றாலும் உன் கரம் பட்டு
காகித ஒடமானேன்!
அலைகளில்லா குளத்தில்
என்னை மிதக்கவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாயே!
இது நியாயமா?
ஓடம் ஓடவேண்டும்...
மூழ்கினாலும் கப்பல் அழகென்று
இந்த மானுடம் வர்ணிக்கிறதே!
அலைகள்தான் எங்களின் வாழ்கையை
நிலைப்படுத்தும் ஆயுதம்!
நங்கூரங்கள் கூட பலநேரம்
நம்பிக்கை இழக்கிறது!
நில அதிர்வுகளில் அலைகள்
அரக்க குணம் கொண்டழிக்கிறது!
எங்களுக்கு உறுதுணையாய்
உடன்வந்தாலும் .....
உனது உள்ளமதை நாமறிவோம்!
இலக்குகளின்றி பயணித்தலை
பாய்மரக்கப்பல்கள் அறிந்திருந்தாலும்
மாலுமியின் திறனறிந்து
பயணித்தலே எங்கள் நோக்கம்!
அடி பெண்ணே! உண்மையை சொல்லிவிடு...
சும்மா எங்களுடன் உறவாடாதே...!
உனது எண்ணத் திசைகளை நன்கறிவோம்...!
இனி காத்திருப்பு பயனில்லை...
இனிய பயணிப்பு நம்மோடு பூத்திருக்கு....
பயணிப்போம் இலக்கை நோக்கி!
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
ReplyDeleteதம்மில் தோன்றிய எண்ணங்கள்..
ReplyDeleteதரணி அறிய,.. தடாகம்
ததும்பும் கருத்து மழை..
தங்கத்திற்கு ஈடான சிந்தனை..
தமிழ் கொஞ்சி விளையாடும்
தரமான கவிதை நயம்..
தவிழும் தென்றலாய் வார்த்தைகள்..
தகிக்கும் அனலாய்,.. உற்சாகமாய்..
தட்டி எழுப்பிடும் உணர்வுகள்.. கவி
தந்த உள்ளங்களை.. கைத்
தட்டித் தட்டி வாழ்த்துகிறேன்!!
தம்பட்டம் தாரைகளோடு
தமிழ்த்தாய் அவள் ஆசிகள் வேண்டி!!
கவிஞர்களாய் பிறப்பதில்லை..
கவிகள் படைப்பதினால்
கவிஞர்களாய் அரங்கேற்றம்..
கவிகள் அரங்கேற..
கலைஞர்கள் அரங்கேற..
கட்டமைப்பு தருவதே.. நம்
கலகலப்பு தமிழ் அறையின் இலக்கு! !
ஈடுபாடுடன் கூடிய அர்ப்பணிப்பு
ஈந்து வரும் உறுப்பினர்களுக்கு..
நல் வாழ்த்துக்கள்!
தொடரட்டும் இந்த தமிழ் வளர்ச்சி ! !
நன்றி திரு ஜேசன்வேலா அவர்களே..வரும் வாரத்தில் இருந்து நீங்களும் உங்கள் கவிதைகளை கொடுங்கள்..
Delete