chat

Thursday, November 29, 2012

கவிச்சோலை - 29 -நவம்பர் -2012


29 -நவம்பர்  -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் தியாகம் என்றதலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்..


PATTAASU :

மின்தட்டுப்பாட்டில் ஒளியூட்ட
மெழுகுவர்த்தியின் தியாகம் ..

தட்டுப்படாத மின்சாரத்திற்காக
அரசாங்கம் தன் மனதில் ஏற்ற வேண்டும்..
அழியாத தீபம்
தொடர் மின்சாரம் வழங்க........

-------------------------------------------------------

துடுப்பாக நானே துழாவ,
படகாக நானே மிதக்க,
படகு சவாரி போக்குவரத்து
ஊஞ்சலாக தொங்கி ,
மகிழ்ச்சி ஆடல் என் மேல்
கதவாக மூடி நான் காக்க ,
சன்னலாக தென்றலை
உள்ளே அழைத்து வர..

மேசையாக வைத்து எழுத
நாற்காலியாக உட்கார்ந்து கொள்ள
நடைவண்டியாக நடக்க பழக
குடிலாக தங்கி வாழ
படுக்கையாக மேல் ஓய்வு
நான் மாறிய தியாகம் ..

மீண்டும் என்னை வளர்த்தெடுக்க
மனிதனுக்கு என்றும் இல்லை நெஞ்சம்
நிழலுக்கு அவன் மீண்டும் என்னிடமே தஞ்சம்


அவனுக்காக நான் என்றும் நிற்கிறேன்
என்னை வெட்டி சாய்த்து
அவன் வாழ்கிறான்
நான் சாகிறேன்.

இப்படிக்கு...
பசுமை போர்வை போற்றிய தியாகி மரம்

-------------------------------------------------------

பதவி நிரந்தரமில்லை.
மக்களே நிரந்தரம்.
நிரந்தரத்தின் தியாகம்,
நியமனமானவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
நியமித்தவர்களுக்கு தியாகம் புரிவதில்லை
தியாகத்தின் வருத்தம்
வெடிக்கும் பொழுது, புலப்படுவதில்லை
வெடித்த பின்னும் கூட அதே நிலை.
நியமனமானவர்களின் செயல்
புலப்படும் பொழுது, மக்கள் இல்லை

======================================================

ANBUSELVI AKKA :

குளத்தில் மூழ்கிய பள்ளிக் குழந்தைகளை
தன்னுயிரைத் தந்து காப்பாற்றிய ஆசிரியை,

தீவிரவாதச் செயலை முறியடிக்கப்  போராடி
உயிர்விட்ட  காவல் துறைத்தலைவர்கள்,

லைமையமைச்சரைப் பாதுகாப்பதில்
தன்னுயிர்  ஈந்த பாதுகாவலர்கள்,

உடல் பொருள் ஆவி உடமைகள் அனைத்தும்
தாய்நாட்டிற்கு அர்ப்பணித்த நல்ல தலைவர்கள்,

மழலையைக் கருவில் சுமந்து சுவைகளைத் துறந்து
சுமையையும் சுகமாக நினைக்கும் தாய்,

எடுத்தகாரியம் யாவினும் வெற்றிபெற தன்னையே மறந்து
புது உலகைப் படைக்கும் அறிவியலறிஞர்கள்,

தூக்கத்தைத் தொலைத்து
நாட்டுநலனே மூச்சாக வாழும் நல்லவர்கள்,

குடும்பத்தை குழந்தைகளின் குறும்புகளை மறந்து
அல்லும் பகலும் போராடி உயிர்காக்கும்   மருத்துவர்கள்,

நிம்மதியாக நாம் துயில பனிமலைச்சிகரத்தில்
பாதுகாப்புப் பணிபுரியும் எல்லைக்காவல் படையினர்,

விண்வெளியில் பயணம் செய்து வியப்பான செய்திகளை
அளிக்கும் சாகச  சாதனையாளர்களான  விண்வெளிவீரர்கள்,

முப்புறமும் வரும் பகையை
முறியடிக்கப் புறப்பட்ட முப்படை வீரர்கள்,

எல்லோரும் இன்புற தாம் துன்புறும் உள்ளங்கள் என
மனிதர்களிலிருந்து  மாறுபட்ட
உத்தமர்களின் வாழ்க்கை    நமக்களிக்கும் பாடம்

வரலாற்றுச்  சுவடுகள் வழங்குகின்ற வேதம்..!
நாட்டுப் பணிக்காக நல்லவர்கள்  மேற்கொண்ட யாகம்..!
அதன் பெயர் தான் தியாகம்...!
அதற்குத் தலை வணங்க நமக்கு  வாய்த்தது யோகம்..!!

======================================================

RULESPUCHANDI :

தியாக விதைகள்

காந்திஜியும்
குமரனும் அமைதியாய்..
போஸ்சும் பிரபாகரனும்
ஆவேசமாய்  -  நாட்டிற்காக !

அகஸ்தியரும்
அன்னை தெரசாவும்  - மக்களுக்காக!

இராணுவமும்
அரசியலும் - மண்ணிற்காக!

இங்ஙனம் ஏராளமான
தியாகங்களினால் நாம் இன்று
மனிதனாய், மகானாய்,
கோமானாய், செல்வச்சீமானாய் !!!!

நம் தேசம் முதல்
ஆகாசம் வரை..

குண்டூசி முதல்
மடிக்கணினி வரை ..

ஒட்டுமொத்த
தியாகத்தையும்
ஒன்றாய் ருசிக்கிறோம்

சமயம் கிடைக்கும்போதெல்லாம்
பரிகசிக்கிறோம்!

தியாக
விதையாகும் திராணி
எமக்கில்லை எனினும்
தியாகத்தை திரித்து
கூறா மனமும்,

தியாகிகளை
மதிக்கும் மாண்பும்
தருவாயோ மகேசா !!

======================================================

SRUTHI :

தியாகம் என்பது ஒரு வகை யாகம்
யாகத்தில்  அழிவது தீமைகள் ...
தியாகத்தில் அழிவது  ஆசைகள்
தனக்காக வாழ்பவன்  மனிதன்
பிறர்க்காக வாழ்பவன் தியாகி
மனிதனாக வாழ பிறவி போதும்
தியாகியாக வாழ தேவை மனிதநேயம் ..

======================================================

ROWTHIRAN :

அலைந்து திரிந்து
அங்கும் இங்கும் தேடிபார்கின்றேன்
என் பெயரை நானும்..

தொடகதிலோ ,நடுவிலோ ,இறுதியிலோ என
எங்கேனும் ஓர் இடம் தியாகிகளின்
பட்டியலில்இருப்பேன் என....

உன்னை காதலித்த நாள் முதல்  பெரும்பாலும்
தூக்கம்,கனவு,நினைவு,பசி,உணவு,உறக்கம்
என ஒவ்வொன்றாய்
தியாகம் செய்ததால்...!

======================================================

MULLAI :

பெற்றோருக்கு நல்ல மகளாக
உடன்பிறப்புகளுக்கு அன்பு சகோதரியாக்
கணவனுக்கு நேர்மையான மனைவியாக
பிள்ளைக்கு பாசமுள்ள தாயாக
மாணவர்களுக்கு அறிவுள்ள ஆசிரியையாக
நண்பர்களை மகிழ்விக்கும் நண்பியாக
அற்பணிக்கும் என் பெயர் - தியாகம்

======================================================

KARTHIS :

தொடர் கண்ணீருடன்
பிறர்காய் ஒளிர
தன்னை உருக்கும்
மெழுகுவர்த்தி.

-------------------------------------------------------

தீயில் வளர்ப்பது யாகம்
தேவையை தவிர்ப்பது தியாகம்.

======================================================

SANTHYA :

காந்தியின் தியாகம்
இந்திய சுதந்திரம்

இரானுவ வீரர்களின் தியாகம்
இந்திய எல்லை பாதுகாப்பு

மெழுகின் கண்ணீரில்
 திரியின் தியாகம்

தேனீயின் தியாகத்தால்
சுவையான தேன் கிடைக்கிறது

பருத்தியின் தியாகத்தால் நமக்கு
ஆடைகிடைக்கிறது

பயிரின் தியாகத்தால் உணவு
கிடைக்கிறது

மரத்தின் தியாகத்தால்
பொருள்கள் கிடைக்கின்றன

நன்பர்களின் தியாக உழைப்பால்
நமக்கு கலகலப்பு  கிடைத்திருக்கிறது

இப்படி எவ்வளவோ சொல்லி
கொண்டே போகலாம்...!

======================================================

DEEPIKAKARTHIKEYAN :

வைக்கும் நெருப்பு நீ எனில்
மெழுகாய் உருகி என் உயிர் தனை
தியாகம் செய்வேன் அன்பே உனக்காக ...

======================================================

KANCHANASUGI :

சிறந்த தியாகிகள்
ஆண்களா .? பெண்களா .?

இதை நான்
ரூல்ஸ் அண்ணாவிடம் கேட்டால் ஆண்கள் என்பார் ..
முல்லையிடம் கேட்டால் பெண்கள் என்பாள்
இதற்க்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால்..

பட்டிமன்றம் எப்பொழுது .?

======================================================

ARUNESH :

மெழுகுவத்திக்கு உயிரூட்டிய தீக்குச்சி
சில நொடியில் அணைந்திருக்கலாம்..!

நான் இரவில் படித்திட ஒளியூட்டிய
மெழுகு சில நிமிடங்களில் உருகியிருக்கலாம் ..

ஆனால் இவைகளின் தியாகச்சுடரால் என்னுள்
ஏற்றப்பட்ட அறிவுச்சுடர் என்றும்

அணையா தீபமாய் …!

======================================================

U_CANT_C_ME :

டெல்லி தியாகிகள் மாநாட்டிற்கு சென்றார்  என் அப்பா ..
இத்தனை வருடம் என்னை  பெத்து  வளர்த்ததற்காக...

======================================================

DREAM ANGEL :

அன்பு அக்கா  நேரத்தை ஒதுக்கி
தியாகம் என்ற தலைப்பில்
அனைவரின் கவிதைகளையும்
படித்து கொண்டு இருக்காரே..!
இதுவும் தியாகம்..!

அனைவரின் கவிதைகளையும் சிரமம் பாராமல்
அதனை கவிச்சோலை அரங்கத்தில்
ஏற்றி கொண்டு இருக்காரே அருணேஷ்..
இதுவும் தியாகம்..!

சுயநலம் அன்றி
அனைவரின் கவிதைகளுக்கும்
பாராட்டுக்களை குவித்த வண்ணமாக
கொடுத்துக்கொண்டு இருக்கும்
கலகலப்பு நண்பர்களின் தியாகம் அளவில்லை...!

இதற்கெல்லாம் தூண்டுகோலாகவும்
இந்த அன்பான கலகலப்பு வண்ணத்துப்பூச்சிகளை
அன்போடு பார்த்து வரும்
நம் கலகலப்பு அண்ணாக்கள் செய்த
தியாகங்கள் ஒன்றில் அடங்கா..

2 comments:

  1. அருமை...அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்..

    ReplyDelete
  2. arumai.....vaalthugal anaivarukum...mikke nandri en kaviyai inaithu ithule aarangethriyathu ku..

    ReplyDelete