chat

Thursday, November 1, 2012

கவிச்சோலை - 01-நவம்பர் -2012

01-நவம்பர் -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் அழகு  என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்..





RULES POOCHANDI :

1) அழகு வார்த்தையே அழகு..!

அ ம்மா  உறவினுள் அழகு..!
      ழ  தமிழினுள் அழகு...!
             கு ணம் மனிதனின் அழகு...

2) அன்னை உடன் தந்தை அழகு
அண்ணன் தங்கை உடன் இல்லம் அழகு
மழலை உடன் மனைவி அழகு
மழலை தான் மானிட அழகு
அறிவு ஊட்டும் அன்பு அழகு
வேஷம் இல்லா நட்பு அழகு
காதல் உடன் மட்டும் காமம் அழகு
இளமை யில்  புறம் அழகு
முதுமை யில் அகம் அழகு
அழகு எல்லாம் முன்று எழுத்து
அல்லா  முருகா இயேசு
முன்றும் இணைந்த உலகு
அதுவே நம் கனவு..!!

======================================================

ANBUSELVI AKKA :

1) கவிதைக்கு வார்த்தை ..கதைக்கு கரு..
கண்ணுக்கு காட்சி... காதுக்கு இனிய பாடல்..
முதியோரின் பொக்கை வாய் சிரிப்பு..
தளர் நடையிடும் குழந்தை ..
அழகிய வண்ணக்  கோலம் ..
நீலவானம்.. அதில் நீந்தும் வெண்மேகம் ..
கோயில் சிற்பம்.. கவரும் ஓவியம் ..
சோலைப்  பூக்கள்.. அதில் வண்ணத்துப்பூச்சி
கொட்டும் அருவி சொட்டும் மழைத் துளி
கடல் அலை தொடுவானம் மலை..
புல்லின் மீது  பனித்துளி ..
வேகமாக ஓடும்  புகைவண்டி..
வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை..
அதில் தொங்கும் தோரணங்களாய் வீடுகள்..
பாவாடை தாவணியில் குமரிகள் ..
அரும்பு மீசையில் ஆடவர் ..
முதல் காதல் முதல் முத்தம் ..
முடிவில்லா அழகு ..

இவை எல்லாமே ..!!



2 ) குமரியின் கொஞ்சல் குழந்தையின் குறும்பு
அம்மா எனும் முதல் மழலைமொழி
காதலனின்  கடைக்கண்  பார்வை
கண்டு சிவக்கும் காதலியின்  நாணம்
நல்ல கவிதை சிறந்த இனிமையான பாடல்
கூலி பெரும் உழைப்பாளனின் நிம்மதிப்பெருமூச்சு
மஞ்சள் முகம் குங்குமம் நிறைந்த அம்மாவின்புன்னகை
அவளுக்கு சேவை செய்யும்  அப்பாவின் கனிவு
இயற்கையின் எழில் துள்ளி ஓடும் மான்
சிங்கத்தின் கம்பீரம் சிறுத்தையின் வேகம்
இப்படி அனுபவிக்க ஆயிரம் அழகு உண்டு உலகில்...

கருத்தாழம் மிக்க ஓவியம் வெற்றிக்களிப்பில் ஆனந்தக்கண்ணீர்..!
குழந்தையின் முத்தம் அது  ஏற்படுத்தும் சிலிர்ப்பு
நிறத்தில் கருப்பானாலும் கவரும் மனிதர்
இமைகள் படபடக்க விழிக்கும் மங்கை
மின்சாரமாய் மிரளவைக்கும் காதல் உணர்வு..

அழகு என்பது ஒப்பீடு அவரவர் மனத்தின் வேறுபாடு
இறைவன் படைப்பில் எல்லாம் அழகு  தான்
 அதை இனிதே அனுபவிப்பது நம் உள்ளத்திற்கு நிறைவு
அழகை ரசிப்போம்... அனைவரும்  வாரீர்...!!

======================================================

PATTAASU :

1) நான் படித்த அழகு கவிதை, உன் பெயர்
நான் எழுதிய அழகு கவிதை, உன் பெயர்
என்னுடைய அழகு முகவரி, நீ
என்னுள் தோன்றும் அழகு சிந்தனை, உன்னால்
நீ என்றும் என்னுள் அழகாய் இருப்பதால்
நானும் அழகு தான்
தமிழ் என்னுள் உள்ளவரை..

2) வைகறை நேரம் குயிலின் குரல்
காலை கதிரவனின் செங்கதிர் துவக்கம்
மழை கால மயிலின் நடனம்
மாலை கதிரவனின் மஞ்சள் வெளிச்சம்
தூவானம் தெளித்த வானவில் வர்ணம்
இவையனைத்தும்
உன் அழகு விழியினுள் அடக்கம்


வர்ணம் தேடி அலைகிறேன்
நீயோ விழிகளில் சுமந்து திரிகிறாய்

என்னை பாராமல்............................. ஏக்கத்துடன் நான்.........

3) என் சொல்வேன்
நான்....
ம்..
என் சொல்வேன்

என்னை சுமந்த
என் அன்னையின்
கருவறை
தவிர வேறு எதுவும்
அழகாக தெரியவில்லை...!

======================================================

RAAJJ :

அழகான வானத்து நிலாவின் கீழ்......
குளிர் தென்றலின் ஸ்பரிசத்திலும் கூட......
ரசித்து சிரிக்க முடியாமல் .....தவிக்கிறது
பசித்த வயிறு !!

======================================================

KARTHIS :

மித மிஞ்சிய மேகக்கூட்டம்
மெல்லிய சாரல் காற்று
துளி துளியாய் சாரல்
கார மிளகாய் பஜ்ஜி
சூடாய் கோப்பை தேநீர்
ஒரு சேர கிடைத்தால் - அழகு!

======================================================

ROWTHIRAN :

உடலுக்கு அழகு வலிவு
உதட்டுக்கழகு பொலிவு
கடலுக்கழகோ அலைகள்
கவிதைக்கழகோ இசைகள்
நிலவுக்கழகோ குளுமை
நீருக்கழகோ ஓட்டம்
இளமைக்கழகு வீரம்
இல்லுக்கழகு தூய்மை
தாளுக்கழகோ எழுத்து
தமிழுக்கழகோ இனிமை
வாளுக்கழகு கூர்மை
வார்த்தைக்கழகு தெளிவு
கொடிகளுக்கழகு மலர்கள்
கொள்கைக்கழகோ உறுதி
குடிலுக்கழகோ ஓலை
கோனுக்கழகோ நீதி
விளக்குக்கழகோ ஒளியாம்
வில்லுக்கழகோ வளைவாம்
புலமைக்கழகோ அடக்கம்
புவியிற்கழகு மக்கள்
பிள்ளைக்கழகு படிப்பு
புலனுக்கழகு அடக்கம்
விரலுக்கழகு நகங்கள்
வீதிக்கழகு கோயில்
மரத்திற்கழகு கிளைகள்
மனிதனுக்கழகோ ஒழுக்கம்

======================================================

NEW_DUST :

கரு நீல வானின்
நிலா முற்றத்தில்.,
கண்கள் மூடி.,
உணர்வுகள் திறந்து.,
உந்தன் கைகள் கோர்த்து.,
கதைகள் பகிர்ந்து.,
சிலிர்க்கும் அந்த நேரமும்,
அதில் சாய்ந்து கொள்ள கிடைக்கும்
உன் தோளும்.,
நமது காதலுக்கு மிகவும் அழகு !!

======================================================

MULLAI :

வானுக்கு நீலம் அழகு...
புல்லுக்கு பச்சை அழகு...
குருதிக்கு சிவப்பு அழகு ...
துறவிக்கு மஞ்சள் அழகு...
அமைதிக்கு வெண்மை அழகு...
துக்கத்துக்கு கருமை அழகு...
கலகலப்பு அரட்டை அறையில்
நமது படைப்புக்கள் அழகு..

======================================================

AJAYKUMAR :

அழகு  என்றால்  அவள் ..
காதல் என்றால் அவள் ..
பாசம் என்றால் அவள் ..
அழகிற்கே அழகு அவள் ..!
ஹசிரா ..!

======================================================

SANGEET 7  :

1) காலை கதிரவன் அழகு
மாலை வெண்மதி அழகு..!

வீசும் தென்றல் அழகு
சிலிர்க்கும் சாரல் அழகு ..!

கவிஞர் கற்பனை அழகு
பாடும் பாடல் அழகு ..!

எழுதும் கவிதை அழகு
அதில் இருக்கும் அர்த்தம் அழகு ..!

தாயின் அரவணைப்பு அழகு
தந்தையின் ஆதரவு அழகு ..!

மழலை பேச்சு அழகு
நேசிக்கும் நட்பு அழகு..!

இதய துடிப்பு அழகு
அதில் பிறக்கும் காதல் அழகு ..!

இந்த வையகம் அழகு
இவை அனைத்தையும் படைத்த இறைவன் அழகு ..!


2) உன் கண்கள் செய்யும்
சிறு குறும்புகளை பார்த்து
தாவி செல்லும்
இதய துடிப்பு அழகு ..!

ஒரு கோடி அர்த்தம்
சொல்லாமல் சொல்லும்
உன்  இதழோரம் வரும்
புன்சிரிப்பு அழகு ..!

தகப்பனாய் நண்பனாய் ..
கண்ணீரை துடைத்து ..
எப்பொழுதும் ஆதரிக்கும்
உன் அரவணைப்பு அழகு ..!

நான் உன் தாய் ஆனாலும்
என்னை நேசிக்கும்
உன் பாசம் அழகு ..!

3) என் குட்டி வீடு அழகு ..!
அதில் இருக்கும் கிச்சன் அழகு ..!
கிச்சனில் இருக்கும் என் டெல் லேப் டாப் அழகு ..!
அதில் நானும் என்கவிதையும் அழகு ..!


======================================================

SRUTHI :

வெற்றிக்கு அழகு முயற்சி
பாராட்டுக்கு அழகு சாதனை
பதவிக்கு அழகு பணிவு
கடலுக்கு அழகு அலை
மழலைக்கு அழகு சிரிப்பு
பறவைக்கு அழகு இறக்கை
மனிதனுக்கு  அழகு மனம்
இறைவன் படைப்பில் யாவும் அழகு
ரசித்து வாழ்ந்தால் வாழ்கையே அழகு.!

======================================================

KANCHANASUGI :

1 ) அழகுக்கு அழகு சேர்க்க வந்தவன் அவன் ..
என் வாழ்விலும்..
என்னை அழகாய் காட்டினான் அவன்..
அவன் யார் என்று இப்பொழுது தெரிந்தது ..
அவன் தான் என் உள்ளம் கவந்த கள்வன் ..
கணேசன் ..!

2) காஞ்சனா படத்தில் வரும் லாரான்ஸ் அழகை விட
கலகலப்பில் இருக்கும் காஞ்சனா எம்புட்டு அழகு ..

3) கலகலப்பு அரட்டை எத்தனை அழகு ..
அன்பு அம்மாவின் அழகான பேச்சு ..
சங்கீத்தின் கொஞ்சும் சிரிப்பும் ஓர் அழகு ..
அஜய் பாடல்கள் சொல்லும் ஓர் அழகு..
அழகோ அழகு ..
பட்டாசு நண்பரின் அழகு சரோசா கூட ஓர் அழகு..
ரூல்ஸ் அண்ணாவின் பேச்சு ..
பட்டிமன்றத்தில் கூடுதல் அழகு ..
முள்ளும் மலரும் முல்லை மற்றும் சின்னாகுட்டியும் ஓர் அழகு ..
தேவாவும் அவன் மச்சி விடும் காதலும் கூட ஓர் அழகு ..
அருணேஷ் சொல்லும் பதில்கள்..
அவன் வரலாற்று சிந்தனை கூட அழகு
சாபுவும் தர்ஷனும் பண்ணும்..
சின்ன குறும்புகள் கூட ஓர் அழகு..
இப்படி சொல்லிக்கொண்டே போகும் ...
என் நண்பர்கள் அனைவரும் அழகு தான் .
இது தான் எங்கள் கலகலப்பு குடும்பத்தின்..
அழகான பசுமையான நினைவுகள் ...

======================================================

MAHEE :

உன்னை பார்த்த பின்பு தான் ..
நான் என்னையே அழகாக பார்கிறேன் ..!

======================================================

SANTHYA :

தமிழில் சொல் அழகு!
மழழையின் சிரிப்பழகு!
வானில் தோன்றும் வானவில் அழகு !
பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பழகு !
இளைஞனின் வழுக்கை தலை அழகு !
பாவையரின் வெட்கச் சிரிப்பழகு !

======================================================

SINDHU :

1) அழகு என்ற தலைப்பில்
ஒரு கவிதை எழுத சொன்னார்கள்..
நான் உன் பெயரை எழுதினேன் ..
சும்மா விடுவாங்களா ,
ரூம் போட்டு அடி பின்னிடாங்க..

2) மனிதன் அழகு ..
மனிதனுக்குள் பெண் அழகு ..
பெண்களுக்குள் நீ அழகு ..
உனக்குள் எல்லாமே அழகு ..

======================================================

GREEN TAMIZHAN :

புள்ளி வைத்தாய் கோலமாணேன்...  அதை
தள்ளி வைத்தாய் அலங்கோலமாணேன்..
தலைப்பு அழகு ..!

======================================================

THANGAM :

அழகு என்னும் சொல்லுக்கு
கவிதை எழுத சொன்னாய் ..
என்னவென்று நான் எழுதுவேன்
இந்த சொல்லுக்கு..
நீயே இலக்கணமாய் திகழ்கிறாய் .
என்  அழகு சரோசாவே ..!

======================================================

ARUNESH :

புயலுக்குப்பின் வரும்...
தென்றலின் சுகம் அழகு!

கோபத்திற்கு பின் வரும்...
சாந்தத்தின் சுகம் அழகு!

ஆக்ரோஷத்திற்குப்பின் வரும்...
மௌனத்தின் சுகம் அழகு!

துக்கத்திற்குப்பின் வரும்...
உற்சாகத்தின் சுகம் அழகு!

இருளுக்குப்பின் வரும்...
வெளிச்சத்தின் சுகம் அழகு!

தோல்விக்குப்பின் வரும்...
வெற்றியின் சுகம் அழகு!

பிரிதலுக்குப்பின் வரும்...
சேர்தலின் சுகம் அழகு!

கற்பனைக்குப்பின் வரும்...
கவிதையின் சுகம் அழகு!

======================================================

MASKMAN :

மழைக்கு தூறல் அழகு
பூவிற்கு தேன் அழகு
கன்றுக்கு பால் அழகு
தாய்க்கு செய் அழகு
மண்ணுக்கு மரம் அழகு
பெண்ணுக்கு குணம் அழகு
வெயிலுக்கு நிழல் அழகு
தாகத்துக்கு நீர் அழகு
போதைக்கு கல் அழகு
உழைப்பிற்கு வியர்வை அழகு
எனக்கு நீ மட்டும் அழகு
உன்னுடன்நா ன் இருந்தால்
என் வாழ்கையே அழகு ..!

2 comments:

  1. கவிதை படைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என்ன ஒரு திறமை இவர்களுக்கு !!!

    ReplyDelete