chat

Friday, November 16, 2012

கவிச்சோலை - 15 -நவம்பர் -2012

15 -நவம்பர்  -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் உண்மை என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்..


RULESPUCHANDI :

 1) உண்மையை தேடி...!

உறை பனியில்
புதைந்த  எதுவும் 
கெடுவதில்லையாம்..
அறிவியல் நன்கு
புரிந்தவர்கள் நம் மக்கள்
கெடாமலிருக்க
கொண்டு
புதைத்தனறாம்
உண்மையை !
தேடி தேடி
கலைத்துவிட்டேன் 
தெரிவிப்பீர்களா அதன்
முகவரியை !!

2) உண்மையென்னும் நெருப்பு..!

ஜனநாயக கடமையாற்ற கணிபொறியும் கன்று குட்டியும்,
கையில் கருப்பு மையடித்து வெளியேறியபோது களிப்பு
பையில் படபடவென ஆயிரம் கிடைத்த சிலிர்ப்பு
அறுவடையின் ஆரம்பமாய் தமிழகமே இருண்டபோது தவிப்பு
மிக்ஸ்சியாய் ,மின்விசிறியாய், தொலைக்காட்சியாய்,
நாம் வாங்கியது நம் சமுதாயத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை!!
விதைத்தவன் நாளை அறுப்பான் என்பது உண்மை!! 

3) உண்மையின் மறுஉருவம்..!

இறைவனிடம் இயல்பாய் வெளிப்படும்
பெற்றவளின் பாசமாய் வெளிப்படும்
ஆசானின் போதனையாய் வெளிப்படும்
இப்படி அனைத்திலும் நேர்மையாய் இருந்த உண்மை 
காதலில் மட்டும் கடுகளவும் இருப்பதில்லை
மானாம் தேனாம் மதியாம் பதியாம்
வேங்கையாம் வேல்விழியாம்!!   யார் இதன் காரணகர்த்தா ??
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த
நன்மை பயக்குமெனின் - - சொன்னவரே தான்!!!

======================================================

ANBUSELVI AKKA :

1 )  உண்மை..!

வாயிலிருந்து வரும் எல்லா வார்த்தைகளும் உண்மையல்ல.. 
உள்ளத்தின் உள்ளிருந்து வரும் வாய்மையே - உண்மை
உண்மையின் உருவமாக சொல்லப்படுபவர் யார்?
உடனே  கூறுவோம் அரிச்சந்திரன்  அவர் என்று
உண்மையின் உருவம் நாம் என்று யாரும் கூறுவதில்லை.

உண்மைக்கும் அரசியலுக்கும் எப்போதும் ஒத்து வராது..
உண்மையான அரசியல்வாதியை உலகின் கண்ணுக்கே தெரியாது..
பொய் கூட புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்
அதுவும் உண்மையாகக் கொள்ளப்படும் வள்ளுவர் வாக்கு இது

உழைப்பில் நேர்மை உள்ளத்தில் தூய்மை
செயலில் வலிமை சொல்லில் வன்மை
யார் வந்து  அழிக்க முடியாத தன்மை
அழியாத  சுவடுகளை காலச் சுவடிகளில்
பதித்துச்செல்லும் அழகான தன்மை
அது கொடுக்கும் நன்மை அச்சொல்தான் உண்மை

பொய்யர்கள் பூவுலகிற்கு தேவை இல்லை
உண்மையை வாழ்வின் பாதையாக்கி
உயரிய செயல்களை வாழ்வின் மூச்சாக்கி
சுயநலமில்லாத செயல் வீரர்களின்
சீரிய பாதையில் செல்ல முயலுவோம்..
உண்மையை  உயரிய அணிகலனாக அணிந்து கொள்ளுவோம்..!

2) பொய் கூட உண்மையாயிற்று..!

அழகாக இருக்கிறாய் என்றேன்
ஆவலுடன் உன்கண்கள் அகல விரிந்தன
நன்றாகப் படிக்கிறாய் என்றேன்
நம்பிக்கை  பூவாக உன்னுள்ளே பூத்தது
உன்னால் முடியும் என்றேன்
ஊக்கம் தெரிந்தது உன்னிடம்
உயரவேண்டுமென உழைக்க ஆரம்பித்தாய்
பொய் கூட உண்மையாயிற்று
உன் மேலுள்ள அக்கறையால்
நீ முயற்சியைத் தொடங்கி விட்டாய்
என் சொல்லை உண்மையாக்க...

======================================================

SRUTHI :

உண்மை கசக்குமாம்
அனைவரும்  சொன்னார்கள்
ஆம் உண்மை கசந்தது
எனக்கும் என் குறைகளை மற்றவர் 
சுட்டிக்காட்டிய போது .....

உண்மை சொல்வது மிகவும் கடினம் ....
உண்மையாய் இருப்பது
அதனினும் கடினம் ...
ஆனால் உண்மையாய்இருந்துபார் ......
உன்னை உலகமே வியக்கும்
இன்னொரு ஹரிச்சந்திரன் என ...

உண்மைக்கு என்றும் அழிவில்லை ......
பொய்மை நன்மை பயக்கும் எனில்
பொய்மையும் வாய்மை என்றார் வள்ளுவர் ..
எனவே உண்மையாய்
இருப்போம் உண்மையே பேசுவோம்...

======================================================

ROWTHIRAN :


கசப்பான உண்மை...!

பள்ளி பருவத்தில் அவள் எதிர் படும் போதெல்லாம்,
அனிச்சையாய் என் தலை முடியை வாரி விடுவதுண்டு,

அவளுக்காக அரைமணி நேரம் காத்திரிப்போம்
என்று அனுமானித்து,
அதில் தோற்று,பலமணி நேரங்களாய் நீடித்து,
அதிலும் தோற்றதுண்டு,

ஆளில்லாத அவள் வீட்டு மொட்டை மாடியை பார்த்தவாறு,
பல ஜாலங்கள் செய்யும் மேகங்களை,
காணாமல் தவறவிட்டதுண்டு,

அவள் உலக அழகி என கனவில் கண்டு,
அவள் கையொப்பம் வாங்கிட,காகிதம் இல்லாததால்,
கணக்கு புத்தகம் நீட்டியதுண்டு,

அவளின் பொய்யான வருகையை சுட்டிக்காட்டி,
பலர் என்னை கேலி  செய்ததுண்டு,ஏமாந்த பொழுதும்,
அதில் வெட்கி நகைத்ததுண்டு,

பல வருடங்கள் கடந்து விட்ட இன்று,
இவையணைத்தும் காதலே இல்லை,
என சொல்கிறது ஓர் கசப்பான உண்மை...!

======================================================

MULLAI :

அன்பு புனிதமானது...
ஆண்மை வலிமையானது...
இன்பம் சுகமானது...
ஈர்ப்பு கவர்ச்சியானது...
உல்லாசம் கேளிக்கையானது...
ஊக்கம் உன்னதமானது...
எண்ணம் நிலையானது...
ஏக்கம் இயற்கையானது...
ஐயம் தேவையற்றது...
ஒழுக்கம் அவசியமானது...
ஓதுதல் நன்மையானது...

இவைதான் உண்மை...!

======================================================

KARTHIS :

மனிதநேயத்தின் மாபெரும் தேடல்
அந்த தேடலில் முடிவில்
அழகு, அற்புதம், புனிதம்,
நித்தியம், மகிழ்ச்சி, மயக்கம்
போன்ற வாழ்வியல் ரகசியங்களை
நமக்கு அளிக்கும் தேடல்.
பொய்யால் மறைக்க இயலா
பொய்யை உரைக்கவல்ல
பிரகாச ஒளிதான்...

உண்மை....!

======================================================

TINTIN :

உலகத்தில் பிறந்த அனைவரும்
எதிர்பார்க்கும் ஒன்று
ஆனால் அரிதாய் கிடைக்கும்
குறிஞ்சி மலர் அது,

நம்பிக்கை என்பது -
அன்பு , பாசம் , நேசம் , காதல்
என்னும் இமயமலைகளின் 
எதிரொலி..!

உண்மை  என்பது -
அன்பு , பாசம் , நேசம் , காதல்
என்னும் இமயமலைகளின்
 உண்மை..!

======================================================

DWARKEE :

1 ) உன் மை விழி தேடி  உலகை சுத்தினேன் உலகத்தில் எதாவது  ஓர் இடத்தில் உண் மை  விழி ஒளிந்திருகுமா என்று,

உண்மை செத்துவிட்டது ஏன் என்றால்  உண் மைவிழி  உண்மை சொல்லவில்லையே...

உன்னால்  மதம்  பிடித்து  அலைகிறேன் உண் மை விழி  என்னை நோக்கும்  என்று...

2 ) உண்மை அது உன் உள்ளத்தில் உள்ளது..
 என்பது ஊருக்கு தெரியாது ..
உண்மை அது உன் உதட்டில் இருக்க வேண்டும் ..

======================================================

SANTHYA :


இந்த உலகத்தில் உழவர்களின்
எண்ணிக்கை குறையகுறைய...
கல்லறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

நாட்டில் ஊழல் அதிகரிக்க அதிகரிக்க...
விலைவாசி அதிகரிக்கிறது!

இதனால் ஏழைகளின் பாடு
பரிதாபமாக இருக்கிறது..

இது தான் உண்மை!

======================================================

SUCHCHITHRA :

சூரியன், நிலவை போல உண்மையையும்
என்றும் மறைக்க முடியாது ....!

======================================================

BABITHAA (VIA ANBU AKKA) :

பொய்மையின் எதிர் உருவாய் நின்று
பூவுலகை ஆட்சி செய்பவளே
உன்னைத்  தாங்கி நிற்கும் எழுத்துக்கள் மூன்றாயினும்
உனக்குள் எழும்   அர்த்தங்களோ ஓராயிரம்
நீதி தேவதை தாங்கிநிற்கும்    நிஜவடிவே
சூரியனை மறைக்கும் மேகம்போல்
சந்தர்ப்பங்கள் உன்னை   மறைத்து நின்றாலும்
பூவுலகை உன் வசமாக்க...

மீண்டும் எழுந்து வா...!

======================================================

ARUNESH :


உண்மை எப்போதும் வலிமை மட்டுமல்ல..
வலியையும் சேர்த்தே கூட்டி வரும்,
உண்மைக்கு வலியை தரும் சக்தி
பொய்யைவிட அதிகமாக இருக்கிறது ...

ஆனால்..
கவிதைக்கு கூட  பொய் தான் அழகு என்கிறார்கள்..

ஏனெனில்
உண்மை சுடும் ..!
           உண்மை கசக்கும் ..!!

======================================================

QUEEN_BEE :

மச்சான் ..!
உன்னை ஏன் இதயம் என்று சொல்ல மாட்டேன்
ஏன் தெரியுமா ?
உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ
எனக்கு விருப்பம் இல்லை
இது தான் உண்மை காதல்...

2 comments:

  1. அருமை.... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. செம செம அனைத்து கவிதைகளும் அருமை !!!!

    ReplyDelete