chat

Saturday, September 22, 2012

உசுர திருடி போறா ஒருத்தி

படம்: கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
இசை: பரணி
பாடியவர்கள்: பவதாரிணி, ஸ்ரீராம் பார்த்தசாரதி





ஆண்: உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள விளக்க பொறுத்தி

என் உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள விளக்க பொறுத்தி
எனக்கு தான் என்ன ஆச்சி
மனசுக்குள் நூறாய் பேச்சி
திசையெல்லாம் ஒண்ணா போச்சி
முழிசாடும் கண்ணாம்பூச்சி

பெண்: உசுர திருடி போறான் ஒருத்தன்
என் உறக்கம் கெடுத்த பாசக்கிறுக்கன்


ஆண்: அல்லிப்பூ மாரால ஆளக்கொன்னு போறவளே
மனப்பாடம் செஞ்சதேல்லாம் மறந்து போகுதே

பெண்: ஆடைக்குள்ளே கோடையில்லை
அருகினிலே நீயும் வந்தால்

வெளியூர் போன வெட்கம் உள்ளூர் வருமே

ஆண்: முழிகின்ற நேரங்கள் முன்னாலே நீ வேணும்
எப்போதும் உன்னை பழிக்க

பெண்: அன்புக்கு வயறில்லை ஆனாலும் பசி கொல்லும்
அணுவெல்லாம் துடி துடிக்க

ஆண்: கொலை வாள் கொண்ட அழகே அழகே
குருதியில் காதலை கலந்தாயே


ஆண்: உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள விளக்க பொறுத்தி


பெண்: வெண்டைக்கா நறுக்கையில
உன் நினைப்பில் விரல் அறுத்தேன்
விடிஞ்சாலும் கனவுகுள்ள முத்தமிடுவேன்

ஆண்: மூக்குத்தி சுரபோல உன்னோடு நான் இருப்பேன்
முடியாம போனா நானும் மூச்ச விடுவேன்

பெண்: துணையாக நீ வந்தால் தோள் மீது சாய்ந்தேனே
இணையான தெய்வம் இல்லையே

ஆண்: கடல் மட்டம் மேலேறி உடல் மூடி போனாலும்
அணையாது காதல் ஒளியே

பெண்: நெடு நாள் காதல் நிலைக்கொண்டாடும்
திருநாள் ஒரு நாள் வந்திடுமே


ஆண்: உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள விளக்க பொறுத்தி

என் உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள விளக்க பொறுத்தி
எனக்கு தான் என்ன ஆச்சி
மனசுக்குள் நூறாய் பேச்சி
திசையெல்லாம் ஒண்ணா போச்சி
முழிசாடும் கண்ணாம்பூச்சி

பெண்: உசுர திருடி போறான் ஒருத்தன்
என் உறக்கம் கெடுத்த பாசக்கிறுக்கன்

No comments:

Post a Comment