chat

Friday, October 12, 2012

கவிச்சோலை - 11-அக்டோபர் -2012


11-அக்டோபர் -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் மௌனம் என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்.


PATTAASU :

1) கோபத்திலும் மௌனம்..
மகிழ்ச்சியிலும் மௌனம்..
துன்பத்திலும் மௌனம்..
இன்பத்திலும் மௌனம்..
துக்கத்திலும் மௌனம்..
துயரத்திலும் மௌனம்..
பிறக்கும் பொழுது அழுகையில் தொடங்கி,
இறக்கும் பொழுது முடிகிறது...

மௌன அஞ்சலி கல்லறையில்..!


2) எண்ணற்ற வார்த்தைகளை கோர்த்து
கவிமாலை தொடுத்தேன்.
என் கண் முன்னே நீ.
உன் அணைப்பிலே நான்.
அதை
பத்திரமாக இதயக்கூட்டில்
பூட்டிவைத்து
நான் மௌனமானேன்.

நான் உதிரும் வரை
அவை என்றும்
என் நினைவோடு
நீங்காது 
அழியாது,
உதிராது,
கலையாது,
மறையாது,
மாறாது அதே பசுமையுடன்....


3) மெளனமாக இருக்கும்
ஆழ்கடல்
கரை மீதுள்ள காதலினால்
தாவித்தவழ்ந்து சிற்றலையாகவும்
ஆரவார அலையாகவும் 
காவு கேட்கும் ஆழிப்பேரலையாகவும் 
நிலத்தை தீண்டி
மீண்டும் உள்ளே
சென்று
மௌனிக்கிறது...!!

4) நாம்
மௌனமாய் உட்கார்ந்து
மௌனத்தோடு ஒன்றி 
மௌனித்து சிந்தித்து ,
மௌனத்தை தொடர்ந்தால்
மௌனமும் நம்மிடத்தில்
மௌனிக்கும்
மௌனம் வெற்றிபெற...!

5)  ஐயகோ!!!

என் செய்வேன் நான்
நீங்கள் இல்லாத இடம்,
சோலையில்லா பாலை.
தனித்திருந்து
மௌனித்திருந்தேன்
மௌனம் களைய
சோலையை
நாடினேன்.
அந்த சோலையே இந்த
கவிச்சோலை..!

6)உள்ளத்தின் அறைகூவல்கள்
உன்னை கண்ட
பொழுதிலே
மௌன்மாகிறது

தேடி பிடிக்கும் விழிகள்
உன்னை பார்த்த
கணத்திலே
ஒளியிழக்கிறது

கவி பாடிய உதடுகள்
உன் பெயர்
உச்சரிக்க
நாணுகிறது

ஆனால் என் விரல்கள்
மட்டும்
உன் விரல் பற்ற
எண்ணி
ஏமார்ந்து
உன் பெயரை கிறுக்கிறது

ஆம் கிறுக்கன் ஆனேன்..!


======================================================

RULES POOCHANDI :

1) மெளனமென்னும் சாட்டை..!

பிரச்சனையை தெரிவித்தாள் அவள்..
பதட்டமின்றி புன்னகைதான் அவன்..
பிரச்சனையின் கோரத்தை
எடுத்துரைத்தாள் பலநாள்..
தோரணையாக எதிர்வாதம் செய்தானவன்
காரியம் சாதிக்கவேண்டி,
கனிவாக கொஞ்சினாள் ..
கனியவில்லை என்றபோது ,
கடைசியில்  கெஞ்சினாள்..
கணமும் கவனம் சிதறாமல்,
காரிகைக்கு இசைய மறுத்தான்..
மெளனமென்னும் சாட்டையை .
சுழற்றினாள் சுறாவளியாய்..!
பாறையவன் பதமாகி பஞ்சாகி
பஸ்பமாகி பாவைக்கு பணிந்தான்
சில மணி துளிகளுக்குள் !!!

2)  மௌனமொரு பொறுமை ..!
பொறுமையோ காண்பதற்கு ஓர் எருமை ..!!
முடிவு புலப்படாததால் வெறுமை..!
கடைசியில் புரியும் நமக்கதன் அருமை..!!
மௌனமும் பொறுமையும் வெற்றிதரும்
என்பது அசைக்கமுடியாத உண்மை  !!!
======================================================

NEW_DUST :

1) மாளிகையின் பகட்டும்..,
பட்டு சொக்கா சலசலப்பும்.,
நாசிக்கு எட்டி., கைக்கு எட்டா,
உணவுகளின் வாசமும்..,
ஒருநாளும் அனுபவித்தறியா.,
ஏழைகளுடைய மௌனத்தின்
அழுகைச்சத்தம்.
என்றுமே வெளியே கேட்டது இல்லை !!


2) நீ...,
எம்மதமாய் இருந்தாலும்.,
என் சீண்டலை ரசிக்கும்
உன் மௌனம்.,
எனக்கு சம்மதமாகவே.,
உணரப்படும்...!!

======================================================

KARTHIS :
உதடுகளின் உரசலும்
வார்த்தைகளில் வன்முறை 
விதைக்கலாம் என்பதால்
பூட்டப்பட்ட வார்த்தைகளின்
பூபாளமாய் மௌனம்...!

======================================================

ANBUSELVI AKKA:

1) நிழலைக் கூட தொடாமல்
நெருங்கி அருகில் நிற்காமல்
உணர்வால் புரிந்துகொள்ளும் காதல் போல
வானிலிருந்து கதிரின் கரங்கள்
ஒளிவழியாக வருடுவதால் வண்ணமிக்க மலராக
மலருகின்ற தாமரையே
தண்ணிலவின் ஒளியாலே தலை காட்டும் அல்லியே
உங்களின் காதல் உலகே அறியுமே
உங்கள் மௌன மொழி ஊருக்கே கேட்குமே..!

2) மொழி இல்லாத நேரத்தில் பேசுவது
கண்களால் புன்சிரிப்பால் புருவம விரிதலால்
சொல்லவரும் செய்திகளை விட
பல நூறு செய்திகளைப் பேசும் ஒரு மொழி
பிறரின் கோபத்தின் போதும் பெரியவர்களின் அறிவுரையின் போதும்
அமைதி காக்க நம்மை அறிவுறுத்தும் மொழி
காதலனின் பார்வையின் போதும் காதலியின் பதிலாக
அனுப்பப் படும் மென்மையான புரிதல்
பிரிந்தவர் கூடும்போது இதுவே மொழியாகும்
அன்பு மிகும் போதும் உணர்வின் வெளிப்பாடு
காதலியின் நாணம் கன்னசிவப்பு
வார்த்தைகள் தடுமாறும் மௌனமே அணியாகும்..!

3) உணர்ச்சிப் பெருக்கின் போதும் நா தழுதழுத்து
நன்றி சொல்ல வரும் போதும்
ஒவ்வாத கருத்துக்கள் உங்கள் முன் வைக்கப் படும் போதும்
உங்களின் துணையாக என்றும் வருவது
பெருமை பாராட்டி பேச எண்ணும்போது அவர்களின்
திறமையை சொல்ல வார்த்தையின்றி நம் திகைத்து நிற்கும் போது
நம் வார்த்தை இல்லாத மொழி மௌனம்
 வார்த்தைகளை விட வலிமையானது

4) நம் உணர்வினைப் பிறர்க்கு உணர்த்துவது
மௌனம் எனும் சிறந்த மொழி அது
மெய்ஞானிகளின் நல்ல மொழி

5) பார்த்தேன் பார்த்தாள்
சிரித்தேன் முகமலர்ந்தாள்
கண்டேன் களிப்பு கொண்டாள்
அருகில் சென்று விரும்புகிறேன் என்றேன்
கண் துளிர்த்தாள் பதறிப் போனேன்
அப்போது தான் அவள் கூறினாள்
மௌனம் தான் அவள் மொழி என்று சைகையினால்..!

6) நீத்தாரின் ஆன்மாக்கள்
நிறைவாக சாந்தி பெற
நாம் செலுத்தும் ஒரு நிமிட அஞ்சலி
அவரின் பெருமைகளை நினைவு கூறும்
அவரை இறையடியில் இளைப்பாற்றும்..!

======================================================

SANTHYA:

என்னவனே!

உயிர் போகின்ற வலியை
கூட தாங்கிக்கொள்வேன் நான்!
ஆனால் உன் மௌனத்தின் வலி
அதை விட கொடுமையாக இருக்கிறது!
உன் மௌனத்தை கலைத்து விட்டு
வாய் திறந்து பேசி விடு!
உன் ஒரு சொல்லில் ஏழு ஜென்மங்கள்
வரை உயிர் வாழ்வேன் நான்!


======================================================

LAVANYA :

மௌனம்

தவம்... போர்க்களம்...
கலை.. கவிதை..
ஆன்மீகம..  தத்துவம்...
காதல்... நிம்மதி...
இவை எல்லாம்
உன் மௌனத்தை விட
வலிமையானது அல்ல...!!

======================================================

MULLAI :

அவளிடம் சில கேள்விகள் ...
உன் பெயர் என்ன?
உன் வயது என்ன?
உன் ஊர் என்ன?
நீ திருமணமானவளா?
கணவன் !!!
குழந்தைகள் !!!
அவள் பதில்...
மௌனம் ???

======================================================

FROM FACEBOOK MRS. JAYASRI RAMESH :

1 ) மொட்டின் மௌனம் பூவாய்
விரிவதில்லை !குழந்தையின்
மௌனம் வசந்தம்
விதைப்பதில்லைஇரவின்
மௌனம் எப்போதும் சுகம்..!

2) சிலையாய் நின்றேன்..!
மௌனமாய் நீயென்னை கடக்கையில்....

======================================================
KANCHANASUGI :

உனக்காக இந்த ஜென்மம்
என்ன,
எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் உனக்காக
மௌனமாய் இருப்பேன்

நீ என்னிடம் பேசும் வரை

======================================================

NISHAA

கடவுள் நம்மிடம் காட்டும் மௌனம், அமைதி.
காதலி காதளினிடம் காட்டும் மௌனம், அழுகை.
குழந்தை வார்தையில்லாமல் காட்டும் மௌனம்,பாசம்.
இறந்தவன் விளக்கும் மௌனம், வாழ்க்கையின் இறுதி.
மௌனம் ஒன்று தான்
ஆனால் அது எத்தனை வகை
மௌனத்தாலே அமைதி படுத்தவும் முடியும்
கண்ணீரை வர வைத்து கதற வைக்கவும் முடியும்
மௌனத்தின் பரிபாஷை
அது இறைவனின் தெய்வபாஷை

======================================================

SANGEET7 :

மௌனம் ஒரு ஈரமாய்
மௌனம் ஒரு ஆழமாய்

சத்தமில்லாமல் ஆற்றும் உரையாடல்
முகபாவங்கள் இல்லாத உணர்வுகள்

அகராதியில் காணும் ஒரு சிறு வார்த்தை
அதிரடியாய் தான் உள்கருத்தை கூறும்

ஒன்றுமில்லா நிலையில் தான் இருப்பதை  
ஆழமாய் பதித்து செல்லும்

ஏதோ ஒன்றை துவங்கும்
ஆனால் ஒன்றும் இல்லாததை போல் அடங்கும்

ஒரு சிறு அறையை கூட பெரிதாய் நிரப்பும்
ஆனால் அணு அளவில் கூட இடைவெளி இல்லாமல் இருக்கும்

தீர்வு காணப்பெராத ஒரு ரகசியம்
ஒளியாய் தன்னுடல் கரைத்து கொல்லும் அதிசயம்

======================================================

ELAN :

சொல்ல வந்த வார்த்தைகளில் ...
சில வார்த்தைகள் மௌனமாய்
மரணிக்கிறது உனது புன்னைகையில் .....

======================================================

MACHO :

இன்பமான நேரங்கில் மௌனம் "சம்மதம்"
உண்மையான உறவுகள் பிரியும் பொழுது, மௌனம் "துன்பம்"
காதலில் மௌனம் "சித்திரவதை"
தோல்வியில் மௌனம் "பொறுமை".
வெற்றியில் மௌனம் "அடக்கம்"
இறுதியில் மௌனம் "மரணம்"


======================================================

ARUNESH :

அன்பின் அமைதியான வெளிப்பாடு - மௌனம்
ஆயிரம்  வார்த்தைகளின்  மேன்பாடு - மௌனம்
இதயத்தால் இயலாத காரியம் - மௌனம்
ஈருடல் ஓருயிரின் வீரியம் - மௌனம்
உணர்வுகளின் பிரதான  மொழி - மௌனம்
ஊமையின் ஒரே  தாய்மொழி- மௌனம்
எண்ணங்களில் சிந்தனை  நீரோட்டம் - மௌனம்
ஏழ்மையின் உணர்ச்சிப் போராட்டம் - மௌனம்
ஐம்புலன்களின் ஆதிக்கத்தை அடக்குவது  - மௌனம்
ஒலியலைகளின் ஓட்டத்தை ஒடுக்குவது - மௌனம்
ஓவியம் கேட்கும் கேள்வி - மௌனம்
ஒளடதம் வேண்டா வேள்வி - மௌனம்
இ ஃ து எந்தன் உயிரிலே கலந்தது ...!

2 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..அருனேஷ் அருமை.. துவக்கம் உயிரெழுத்துக்களில்... பிரமாதம்..

    ReplyDelete
  2. நன்றி ஐயா ..! அனைத்து கவிதைகளும் அருமை ..அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....

    ReplyDelete