chat

Thursday, December 20, 2012

கவிச்சோலை - 13 -டிசம்பர் -2012

13 -டிசம்பர் -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் தாய்மை  என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்..



PATTAASU :

அன்பு அம்மா, 

கண்ணின் இமைபோல் 
என்னை காத்தவளே,
நீயில்லாத என் வானம் 
நிலவில்லாத அமாவாசை தான்!!

சோதனைகள் பலவந்தும் 
என்னை காத்தவளே,
நீ இல்லாத வாழ்க்கை 
எனக்கு சோதனையாச்சே!!

என் கரம் பற்றியே 
எங்கும் செல்பவளே, 
இன்று என்னை 
மட்டும் தவிக்கவிட்டாயே!!

அருகில் நீ இருக்கும் 
பொழுது புரிந்துகொள்ளவில்லை,
நீ இல்லாத பொழுது 
வாழ்க்கையே புரிந்தது!!

என்னை ஈன்றவளே,
உன் நிழலினும் 
பாதுகாப்பு வேறில்லை.

------------------------------------------

உன்னை அள்ளி சுமந்த 
இதயம் 
என்றும் உன்னை மட்டும் 
சிந்திக்க,
நீ 
அதை தள்ளி வைத்து 
உதறினாய்


இருந்தாலும் உன்னை 
தன்னுள் 
வைத்து கொண்டு 
பிரிகிறது...............
 உனக்கு மகிழ்ச்சி தர


அதுவே அம்மா என்ற
மூன்றெழுத்து.................

======================================================

ANBUSELVI AKKA :

தாய்மை

சுமக்கின்ற காலத்திலே சுவைகளை விட்டொழித்து 
உடல் மெலிந்து  உருக்குலைந்து   தளர் நடையில் தவமியற்றி  
எமை  ஈன்ற   தெய்வமாம்   எம் தாயின் பொறுமைக்கு
நன்றி என்ற சொல்லாலே மகுடம்சூட்ட இயலுமா   

பெற்றெடுத்து   பெயர்சூட்டி   தொட்டிலிட்டு   தாலாட்டி 
கைபிடித்து நடந்துவந்து   காலமெல்லாம் சீராட்டி 
கண்ணின் கருமணியாக காத்து வளர்த்திட்டாள் 
பிஞ்சு மழலையிலே நெஞ்சம் நெகிழ்ந்து விட்டாள்

நாளைய  உலகின் நல்ல குடிமகனாய் 
எதிர் கால சமூகத்தின் இணை யற்ற தூணாய்
எப்போதும் உயர்வாக இனிய கனவுகாணும்
தியாகத  திரு உருவம் தெய்வத்தின் தெய்வம்

தன்மைகனைப் பேணுகின்ற தாயாரைப் பார்த்ததுண்டு
தன்மகனின் உறுப்புகளால் பிறரை வாழவைக்கும் தாயும்உண்டு
துயரிலும் தர்மம்செயும் தெய்வகுணம் அதற்குஉண்டு
மன்னுயிரை வாழவைக்க இதுமகேசன் தந்தவரம்

மலடென்ற பெயர் மாற மடிமீது வந்துதித்த
மழலையை  நேசிக்கும் மாசற்ற உள்ளமிது 
தனைவெறுக்கும் மைந்தனையும் தள்ளாது அன்புசெய்யும்
தன்னிகரில்லாத தகைசான்ற நல்உறவு

தன்னலம் இல்லாமல் தமைச்சார்ந்தோரை வாழவைக்கும் 
தியாகத்தின் சிகரம்  திகைக்கவைக்கும் இவ்வுறவு
கருணையைப் பொழியவரும் கடவுளின் பிரதிநிதி
ரத்தத்தைப் பாலாக்கி உயிர்காக்கும் நல்மருந்து

தாய்மைப் பண்புகொண்ட ஆணோ பெண்ணோ 
அனைவரும்  தாய்தான்  அதிலசிறிதும்  ஐயமில்லை 
தாய்மைப் பண்புகொண்டு தியாகப் பணிசெய்வோம்  
தாயின் பாதங்களை சிரம்தாழ்த்தி வணங்குவோம்

---------------------------------------------------------------------------------

இரவுபகல் விழித்திருந்து இறைவனை வேண்டிக்கொண்டு
கடுமையான பத்தியத்தை கடைப்பிடித்து வாழும் தன்மை
எல்லோரின் தேவையையும் இன்முகத்தோடு நிறைவேற்றும்
தனக்கென  வாழாத தெய்வத் திருவுள்ளம்

இறைவனைப் பார்ப்பதற்கு தவம் செய்யும் முனிவர்களும்
இறைவனை ஏற்காத பூவுலக மாந்தர்களும்
நாளும் வணங்கிடும் நடமாடும் தெய்வம்

நிலமாக நதியாக இயற்கையாக உலாவந்து
உலக உயிரினத்தை அன்போடு காக்கின்ற 
அனைத்தையுமே தாயாக வணங்குகின்ற 
மாந்தர்கள் வாழுகின்ற மகத்தான பூமி இது

உலகபாரம் சுமக்கும் பூமா தேவியாய்
உண்ண  உணவு தரும் அன்ன பூரணியாய்
செல்வங்கள் தந்து சீராட்டும்   திருமகளாய்
கல்விக்கண் திறந்து   வாழவைக்கும் கலைமகளாய்
தீமை கண்டு பொங்கிஎழும்  வீரத் திருமகளாய்
மகளாய் மனைவியாய் தாரமாய் தாயாய் 

அனைத்து இல்லங்களிலும் ஆனந்தம் நிறைந்திருக்க 
தாரணியை வாழவைக்கும் தாரக மந்திரம் 
தாய்மை எனும் சொல்  அதனை வணங்கி மகிழ்ந்திடுவோம்

======================================================

RULESPUCHANDI :

தாய்மை என்னும் மந்திரக்கோல்...!!

இறைவன் மங்கையர்க்களித்த மந்திரக்கோல் தாய்மை

அக்காள், தங்கை, அண்ணி, மனைவி என பெண் உறவுகள்
அரசல் புரசலாக அனைத்திலும் உரசல்கள் பல

மகளாக மருமகளாக, சகோதரியாக மனைவியாக 
அனைத்திலும்கூட தோற்ப்பாள்

தாய்மையிலோ சிறு சலசலப்புக்கு கூட இடம் தராமல்
அமைதி காப்பாள்

ஏனைய உறவுகள் நம் முகச்சலனத்தை புரிய 
தடுமாறும்போது

அன்னை மட்டும் நம் மனச்சலனத்திற்க்கும் சேர்த்து
பரிகாரம் தேடுவாள்!

வேறென்ன தகுதி வேண்டும்
தாய்மையென்னும் மந்திரகோலை அவள் பெற!!

======================================================

NEW_DUST :

இரு குழந்தைகள், ஒரு கணவன்,
இருப்பது மூன்று பழங்கள் என்றால், 
பழம் என்றால் பிடிக்காது என ஓங்கி,
ஒலிக்கும் குரல் தான் தாய்மை !!!

------------------------------------------------------------

என்றும் எனை காத்து நில் என ,
கடவுளை நாம் வேண்டி நிற்க.,
காணுமிடமெல்லாம் காட்சி தர.,
என்றும் துணை நிற்க.,
ஒரு அவதாரம் பத்தாது என தான்,
ஒவ்வொரு இல்லத்திலும் 
கடவுள் வசிக்கிறான்,
ஆயிரம் அவதாரமாய்..,
அன்னையின் வடிவில் !!!

======================================================

SRUTHI :

கண்ணுக்கு அழகு மை !
பெண்மைக்கு அழகு தாய்மை !
தாய் கடவுளின் அவதாரம் !
அவளே  நமக்கு ஆதாரம் !
ஆயிரம் உறவுகளில் அற்புத உறவு தாய்மை !
பெண்மைக்கு பெருமை தாய்மை !

======================================================

MULLAI :

குழந்தையாய் இருக்கும்போது தெரியவில்லை...
குழந்தையை சுமக்கும்போது தெரிகிறது ...
வலி... சுமை...சுகம்...தாய்மை

======================================================

KARTHIS :

தாய்மை 
உலகப் புனிதங்களுள் முதன்மையானது 
பெண்மைக்கு மட்டுமே இறைவனளித்த 
பரிசா தாய்மை? ஆண்களுக்கு? 
தாயகக்கனவும், தவிப்பும் - தாய்மையே.

======================================================

ARUNESH :

புயல் காற்றில் திக்குத்திசை  
தெரியாமல் போனாலும் ! 
பருவமழையில்,
பறக்க இயலாமல் போனாலும் ! 
சிறகு விரித்து,  
அலகில் உணவு சுமந்து,  
தன் கூடு  திரும்பும்..  
தாய்மைக்கு  நிகர்  
ஏது இவ்வுலகில் ! 

======================================================

NISHAA :

தாய்மை என்பது என்ன ..?

கருவறை என்னும் கடவுள் வழியாய்
மனிதன் பூமிக்கு வருவது 
அந்த கருவறையின் உள்ளே ஒரு கோடி 
அன்பின் அணுக்கள்..நம்மை சிறை செய்ததோ..
பிறந்த பின் மௌனம் தான் பேசியதோ ..?
அழுகை தான் பசியை சொன்னதோ .?
அவள் கொடுத்த தாய்பால் தான் 
தாய்மை உணர்வை ஊட்டியதோ..?
அந்த தாய்மை கருவறையை அடுத்து 
காதலனின் இதயத்தில் தான் கிடைக்கும்
அவன் இதயத்தில் உன்னை வைத்து 
நித்தமும் அதனுடன் பேசும் அவன் 
நமக்கு இன்னொரு தாய் தான்..!

======================================================

QUEEN_BEE :

ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா!

======================================================

THANGAM :

என் தாய்யை 
சுமக்கிறேன் 
என்னை இன்றவலை நான் 
இன்ருஏடுக்க முடியாது 
 சுமக்கிறேன் ஒரு 
சேயாய் 
அவள் இறுதி வரை 
சுமந்துகொணடே 
இருப்பேன்  
ஒரு தாயாக..!

======================================================

SANGEET7 :

Motherhood is a beautiful phase
Every woman wud love to embrace

Joys of motherhood are vast indeed
Being a mother makes a womans life 

======================================================

MAHI BASKY :

அம்மா என்ற மூன்றெழுத்து 
உலகில் விலை மதிக்க முடியாதது..
இது மனம் எனும் மூன்றெழுத்தில் பூவாகி...
காதல் எனும் மூன்றெழுத்தில் மணமாகி...
உயிர் எனும் மூன்றெழுத்தில் காய் ஆகி... 
தாய்மை எனும் மூன்றெழுத்தில் 
இனிமையான கனியாகிறது..
பெண்ணவளுக்கு பெருமை சேர்த்து... 
இவ்வுலகில் எல்லாவற்றையும் 
ஒன்றாக இணைப்பது இந்த தாய்மை...

======================================================

TAMILGIRL :

அம்மா அம்மா , என்று சொன்னேன் 
மகளே மகளே என்று அவள் சொன்னாள் ..
காதலன் வந்ததும் என் தாயை மறந்தேன் 
ஆனால் மகளே மகளே 
என் தாய் தேடி வந்தாள்..
கல்யாணம் ஆனதும் மகளே மகளே 
என் என் பிள்ளைகளை நோக்கி கூப்பிட்டேன் 
ஆனால் அவளோ காதலா காதலா என்று 
அவள் காதலனை கூப்பிட்டாள்..
எல்லாம் உணர்ந்து நான் அம்மா அம்மா என்று 
என் தாயை தேடி ஓடினேன் ,ஆனால் 
என் தாய் வெகு தூரம் என்னை விட்டு சென்று விட்டாள்...

======================================================


RIYA : 

தாய்மை என்ற சொல் உணர்த்தும் பெண்மை 
அதுவே இவ்வுலகில் மாற்றப்படாத உண்மை 
பத்து மாத காலம் என்னை 
உன் கருவறையில் பொக்கிஷமாய் சுமந்தாய் 
உன் சிசுவை எந்த கொசுவும் தீண்டாமல் பார்த்தாய் 
நான் முதலில் எடுத்து வைத்த அடியை நீ பார்த்து ரசித்தாய்..
இரவு நேரங்களில் நான் நிம்மதியாய் உறங்க 
நீ உறங்காமல் விழித்தாய் ..
நான் வாழ்வில் முன்னேற நீ பல ஆலயங்கள் ஏறினாய் 
இப்படி உன் வாழ்வையே எனக்கு அர்பணித்த உன்னை 
என் மனம் என்னும் கருவறையில் சுமக்க 
ஆசைப்படுகிறேன் தாயே...!

======================================================

SACHIN :

அம்மா,
அணுவைச் சிதைத்து
ஏழ்கடலைப் புகட்டிப்
பொதுவாய் நின்ற
ஓர் இன்பக்கொள்கை!
அம்மா!

உலக வாழ்க்கைக்கு
அப்பாற்பட்ட ஓர் உண்மை
உயிர்பெற்று உலவுகிறது
இவ்வுலகில்!

அம்மா என்ற மூன்றெழுத்து,
மனம் என்ற மூன்றில் பிறந்து,
உயிர் என்ற மூன்றில் கலந்து,
தாய்மை என்ற மூன்றில்
முடிசூடிக்கொள்கிறது,
இவ்வுலக உறவுகளிடம்!

ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா!

ஆண்டாண்டு அழுதுபுரன்டினும்
ஆண்களுக்குக் கிட்டாத ஓர்
அரிய உணர்வு,
தாய்மை!



No comments:

Post a Comment