chat

Thursday, October 18, 2012

கவிச்சோலை - 18 -அக்டோபர் -2012

18-அக்டோபர் -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் ஊக்கம் என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதைசிதறல்கள்...!



RAAJJ :

காதலின் விளைவாக கருவாகி......
அன்னையின் மடியில் உருவாகி.....நாம் வளர்ந்தது
அன்பின் ஊக்கம் !

தத்தி தவழ்ந்து நடைபழகி.......
மழலை பேச்சின் மொழிபழகி......நாம் வளர்ந்தது
ஆரோகியத்தின் ஊக்கம் !!

தாலாட்டின் ஓசை கேட்டு.......
தாயவளின் வருடல் பெற்று.....நாம் கற்றது
இசையின் ஊக்கம் !

அக்கம் பக்கம் உள்ள தோழமையோடு........
நம் பொம்மைகள் பகிர்ந்துகொண்டு........நாம் அறிந்தது
ஈகையின் ஊக்கம் !

வெள்ளந்தியாக பேச தெரிந்து........
பொய்மொழிகள் பேசிடாமல்......நாம் பேணியது
உண்மையின் ஊக்கம் !

ஆரம்ப பள்ளியில் படித்து.......
அனைத்திலும் முதலாக வந்து.....நாம் பெற்றது
ஊராரின் ஊக்கம் !

வானவில், வண்ணத்துபூச்சி என்று.......
இயற்கையின் வியப்புகள் ரசித்து.....நாம் கொண்டது
எளியதொரு ஊக்கம் !

பச்சிளம் வயதின் ஆரம்ப படியில்......
பகுதறிய இயலாத மனதின் வடிவில்......நாம் யோசிப்பது
ஏற்றத்தின் ஊக்கம் !

கடவுளின் வடிவமான மழலை வயதில்........எளிதாக
கற்றுகொண்டோம் ஊக்கத்தை......

மனிதனாக வளர்ந்துவிடும் ஒரே ஒரு காரணத்தால்......
இவை அனைத்தும் தொலைத்து
பெற்றுக்கொண்டோம் பகட்டு எனும் தூக்கத்தை !!!!!


தூக்கம் விழித்து....ஊக்கம் வளர
ஒரு வழி நிச்சயம் உண்டு !!

உடலை மனிதனாக.....
மனதை மழலையாக....வைப்போம் !!

ஊக்கம் எனும் அருமருந்து......
நமக்கு மட்டும் கொள்ளாமல்......
சக மனிதனையும் ஊக்கத்தால்....தைப்போம் !!

======================================================

RULES POOCHANDI :

வள்ளுவர் வாரிகொடுத்த சொத்து..!
ஊக்கமுடைமையில் குறள்கள் பத்து..!!
பத்திலொரு ஒளிரும் முத்து..!- இதோ..

"வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு"

வள்ளுவனுக்கு வக்காலத்து வாங்க ...
ஓளவையின் ஆத்திசூடி..

" ஊக்கமது கைவிடேல்"

எத்துனை சான்றோர்
ஏராளம் ஊக்கமளிதிடினும்..
ஒரு செயலுக்கான பலன்..
சிந்தனையிலோ அடைமழையென கொட்டும் ..
செயலிலோ மழைதுளியென சொட்டும்...
அதுகண்டு ஈனர்களின் வார்த்தைகள் தேளாய் கொட்டும்..

 இதை எல்லாம் முன்பே அறிந்த வள்ளுவனார்..
 முத்தாய் உதிர்த்தார் நமக்கு அடுத்த சொத்து - அது

"உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
 தள்ளினும் தள்ளாமை நீர்த்து"

 இத்துனையும் படித்தேன் நான் ஊக்கத்திற்காய் கவிவடிக்க..
 அதனையே கவியாய் தொடுத்தேன் நீவீர் படிக்க..
 முடிவாய் ஓர் வரி நாமெல்லாம் செவிகொடுக்க..

- ஊக்கமது கைவிடேல்!

======================================================

PATTAASU :

உன் கண்களின் ஊக்கம்,
திரும்பசெய்கிறது உன் பக்கம்.

மீண்டும் செயல்படும் முன் நோக்கம்.
அதனால் என் உள்ளத்தில் தாக்கம்,

தினமும் உன்னை பார்க்கும் பழக்கம்.
ஏனோ என்னுள் மயக்கம்,

பழக்கப்படாத புது ஏக்கம்,
பரந்திருந்த என் உலகம் முடக்கம்.

இன்று உன்னால் நுடக்கம்.
இன்றிலிருந்து துவக்கம்,

நடித்திராத இனிய நாடகம்,
அதில் இசையோடு பாடும் காதல் இராகம்
.
வீழ்ந்தேன் காதலெனும் தடாகம்,
நீயில்லையே என்றுமே துக்கம்
.
என் இறுதியும் பக்கம்.
மண்ணோடு நான் அடக்கம்..!.


======================================================

ANBUSELVI AKKA :

தத்தி நடந்து வந்து தடுமாறி  விழும்போது
உன்னால் முடியுமெனும்   
நம்பிக்கையைக் கொடுக்கும்
அம்மாவின் விரல்...!

பள்ளி சென்று படிக்கும் போதும்
பல்துறைப் பயிற்சியின் போதும்
விடாமுயற்சியை வித்திட்ட
அப்பாவின் அரவணைப்பு...!

பெண்தானே என கேலி பேசும் பலர் இருக்க..
சாதிக்கப் பிறந்தவள் நீ ..!
யார்க்கும் சளைத்தவள் அல்ல எனும்
ஆசிரியரின் சொல்...!

திறமையைப்  பாராட்டி ,
உணர்வுக்கு மதிப்பு தந்து,
இன்னும் உயர்ந்திடு.. !
எனக்கூறும்  பெருந்தன்மையுள்ள
கணவனின்   அன்பு..!

என்னை வளர்த்தவளே..!
இவ்வுலகில் பெருமை பெற,
நீ உன்னையும்  வளர்த்துக்கொள் ..எனக் கூறும்
மகளின் நட்பு நிறைந்த பாசம்..!

எச்செயலைச்  செய்தாலும்
நிறையைக் காணும்,
நெறிப்படுத்தும் நட்பு   வட்டம்..!

ஊக்கம் ஒன்றே ஆக்கம் தரும்..
இத்தனை சுற்றம் எனைச் சூழ்ந்து இருப்பதால் தான்
உறவாக உயர்வும்,எனைச் சேர்ந்தே இருக்கிறது..!

======================================================

NIRMALA (VIA ANBU AKKA) :

ஊக்கம் உற்சாகத்தின் ஊற்று..
நெஞ்சத்தை நெகிழவைக்கும் புன்னகைக்  கீற்று
மனக் கதவைத் திறக்கும் மந்திர சாவி..
இருட்டறையில் சிறு வெளிச்சம்
வாழ்க்கையின் விளிம்பை எட்டினாலும்,
வாழக் கற்றுக்கொள்..!

மாற்றங்கள் உனக்குள் நிகழும்
ரணங்கள் மாறும்..
சறுக்கி விழாத பாதையில்..
ஊக்கம் உன்னை உந்தித் தள்ள..
சாதனைகள் உன் சாளரத்தின் பக்கத்தில்..
ஊக்கம் உடையவனுக்கு தூக்கம் தூரம்
ஏக்கம் மாறும்..
ஏற்றங்கள் ஏணிப்படிகளாய் எப்போதும்  ..!

======================================================

NEW_DUST :

தழைக்கும் ஆசையில் கிடைக்கும்
கம்பையும் பிடித்து உயரே எழுகிறது..,
தரையில் வளரும் தாவரக் கொடி !!

உழைக்கும் ஆசை உனக்கும் இருந்தால்,
விண்ணையும் பிடித்து மேலே உயரலாம்.,
தரையில் உன் கால்களை ஊனிய படி !!

ஏக்கம் மட்டுமே தேவை, வெற்றி பெற !!
ஊக்கம் என்பது தானே தேடி வரும் !!


======================================================

RAMYA :

மனிதன் வாழ்கையில் முன்னேற முயற்சி அவசியம்
அந்த முயற்சி குறையாமல் இருக்க
நமக்கு தேவை ஊக்கம் ....
ஊக்கம் இருந்தால் உலகம் கைக்குள்
ஊக்கம் இல்லாதவனுக்கு உலகமே இல்லை
முன்னேற துடிக்கும் மானிடா  ....
எதை கைவிட்டாலும் ஊக்கத்தை மட்டும் கைவிடாதே...
அது எப்போதும் உன்னை கைகொடுத்து முன்னேற்றிவிடும்

======================================================

KARTHIS :

தேக்கம் உன்னை உயர்நிலைக்கு
எடுத்து செல்லாது
ஊக்கமே உன்னை உயர்த்தும்,
வீழ்ச்சியில்தான் எழுச்சி உள்ளது...

ஒவ்வொரு குழந்தையின் நடைக்குப்பின்னும்
அன்னையின் ஊக்கமுள்ளது,
ஊக்கம் இருந்தால் மட்டுமே
ஒவ்வொரு வீழ்ச்சியும் தோல்வியடையும்...!

======================================================

KANCHANASUGI :

என்ன..? எப்படி ..?
எவ்வாறு இது நடந்தது ..?

ஆனால் இன்றோ...!
இவர்கள் கொடுத்த ஊக்கம்..
என்னை இவ்வுலகில்
வாழ வைத்து இவர்கள் இல்லையேல்
நான் இல்லை ..என்பது போல் ..
கலகலப்பு உறவினர்கள்
என்றும் என்வாழ்வில் ..
புதுவசந்தமாய் இருப்பார்கள் ...!

======================================================

ARUNESH :

ஆக்கம் எதுவாயின் வெற்றியடைய,
வேண்டும்  ஊக்கம் ..

நோக்கம் பெரிதாயினும் எட்டிப்பிடிக்க,
வேண்டும் ஊக்கம் ...

தேக்கம்  ஏதுமின்றி சிறிப்பாய்ந்திட,
வேண்டும் ஊக்கம் ..

தாக்கம் உன்னை தாங்கி நிற்க,
வேண்டும் ஊக்கம்

ஏக்கம் ஏணிப்படிகளாகி ஏறிட ,
வேண்டும் ஊக்கம்..

தூக்கம் தொலைத்த காலங்கள் மறைய ,
வேண்டும் ஊக்கம்..

ஒழுக்கம் உன் வாழ்வில் ஓங்கி  உயர்ந்திட ,
வேண்டும் ஊக்கம்..

======================================================

MULLAI :

தனிமையில் என்னுள் ஒரு தாக்கம்
இங்கு வந்தேன் ஒரு நோக்கம்
அளித்தேன் அன்பாக பல ஆக்கம்
கிடைத்தது ஏகோபித்த உங்கள் ஊக்கம்
மேலும் தரவேண்டுமென்பது என் ஏக்கம்

======================================================

TAMIL REUNION :

அம்மா உன் தலையில் தடவிட..
தானாக உனக்கு வரும் ஊக்கம்..!

உனக்கு தெரியாதது எதுவும் இல்லை ,
நீ தாண்டா  என் ஹீரோனு சொல்லும்
அப்பாவின் வார்த்தையில் ஊக்கம் ..!

தோல்வியின் விளிம்பில் நீ இருக்கையில்..
உன்னை வெற்றியை நோக்கி தள்ளிவிடும்
உன் நண்பனின் கையில் ஊக்கம்..!

மனம் குழம்பிய நிலையில்
உன்னை உன் காதலியின் கண் பார்வையில்
எல்லாம் தெளிவடையும் ஊக்கம் ..!

======================================================

DWARKEE :

தூக்கம் இன்றி தவிக்கும் என் கண்களுக்கு ,
உன் சிரிப்பு தான் ஊக்கம் ..!

======================================================

ROWTHIRAN :

தேக்கு மர கட்டிலில் படுத்து ,
பங்குச்சந்தை ஏற்றமா ? இறக்கமா? என்று
பகட்டு வாழ்க்கை வாழ்பவனுக்கு
மட்டுமா தேவை ஊக்குவிப்பு..?

ஊக்கு  விற்பவனுக்கும் ,
தேவைபடுகிறது ஊக்குவிப்பு ...!

No comments:

Post a Comment