08 -நவம்பர் -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் தன்னம்பிக்கை என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்

ANBUSELVI AKKA :
1) வெற்றி என்னும் திக்கை எட்ட
எண்ணத்திலே இலக்கை இடைவிடாது நிறைத்து,
அதையடையும் வழிமுறைகளை வகைப்படுத்தி
முயற்சியை செயல்படுத்த ,
முனைப்பு அளிப்பது... தன்னம்பிக்கை..!
பிறர் மீது நாமும் நம்மீது பிறரும்
வைக்கும் நல்ல எண்ணம் நம்பிக்கை
திறன்களை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு,
வாழ்வில் வெற்றி பெற நமக்கு வேண்டும்.. தன்னம்பிக்கை..!
சங்கடங்களால் நாம் சறுக்கி விழும் போதும்
துன்பச்சுவடுகளால் தடுமாறி எழும் போதும்
ஆற்றாத்துயரிலே ஆழ்ந்து அழும்போதும்
கைகொடுத்து எழுப்பும் கை... தன்னம்பிக்கை..!
கவலைகளைக் கலங்கச்செய்து,
துயரங்களை துவளச்செய்து,
துன்பக் கடலில் நாம் மூழ்கிய போதும்,
துடுப்பெடுத்து கரை சேர்க்கும் கலம்...தன்னம்பிக்கை..!
முடியாது என்ற சொல் அகராதியில் கிடையாது
நம்மால் முடியும் எனும் வேகத்தை நமக்குள்ளே,
அக்னிக் கொழுந்தாக, ஆர்ப்பரிக்கும் கடலாக,
உணர்வோடு ஒன்ற வைப்பது... தன்னம்பிக்கை..!
நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை
நன்னம்ப்பிகை முனையைச்சுற்றி மாலுமிகளை
இந்தியா வரசெய்தது தன்னம்பிக்கை,
விண்ணிற்குச் சென்று மீள்வதும்...தன்னம்பிக்கை...!
ஒருமுறை தோற்றாலும் ஓயவில்லை என நினைத்து,
ஓராயிரம் செயல்களை ஒவ்வொன்றாய் நிறைவேற்றி,
வெற்றிக்கனி பறிக்க விழையும் அனைவருக்கும்,
வாழ்வின் மூச்சாக வேண்டுவது...தன்னம்பிக்கை..!
2) நம்பி அவன் கை பிடித்தான்
நங்கைக்கு வாழ்க்கை அமைந்தது
எதிர்கால நம்பிக்கை அவனே என்பதால்
வாழ்ந்திட அவளுக்கு பிறந்தது தன்னம்பிக்கை...!
======================================================
PATTAASU :
எதிர்பு என்பது வெறும் வார்த்தையே..
அது எங்களுக்கு தடையில்லை.
எதிர்ப்பு
எங்களுக்கு ஊக்கம் தருகிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு கற்பனை திறனை வளர்கிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு மனவலிமை தருகிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு போராட்ட குணம் அளிக்கிறது
எதிர்ப்பு
எங்களை மென்மேலும் வளர்க பயன்படுகிறது.
தன்னம்பிக்கையுடன்
மெருகேருவோம்
போராடுவோம்
வளர்ப்போம்
வளருவோம்
சுதந்திரமாக மகிழ்வோம்
மகிழ்விப்போம்.
அதற்குள் மடிந்தால் வீழ்வேன்
வீழ்ந்து மடியேன்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...............................
======================================================
BABITHAA (VIA ANBU AKKA) :
தன்னம்பிக்கை...!
வானத்தை தொட நினைக்கும் பறவைக்கும்,
ஒற்றுமையை நிலைநாட்டத துடிக்கும் காக்கைக்கும்,
சிறுதுளி ஆனாலும் சேமிக்க தோன்றும் தேனீக்கும்,
வாழ்வை சிறப்பாய் வாழ்ந்துவிடலாம் என்ற
தன்னம்பிக்கை இருக்கும்போது
மனிதா...! நீ மட்டும்
தற்கொலைக்கு யோசிப்பது ஏன் ?
======================================================
RAMYA (VIA ANBU AKKA) :
ஆறு வயதிலிருந்து ஆத்திசூடி படித்து
ஏறாத பாடததை எல்லாம்
எழுதிப் பார்த்து,
பத்தாம் வகுப்பில் பாடத்தை
பத்து முறை படித்து,
ஏட்டுச் சுரைக்காய் கல்வியைக் கற்று
காத்திருக்கிறேன்..
வேலையை எதிர் நோக்கி..
தன்னம்பிக்கையுடன்....!
======================================================
ROWTHIRAN :
பரந்து விரிந்த வானம்
என்றென்றும்
திறந்து இருக்கும் என்ற
தன்னம்பிக்கையில்
பறவைகளின் வாழ்க்கை
சிறகடித்துக் கொண்டிருக்கிறது...
தான் வேரூன்றி நிற்கும்
பூமித்தாய் தன்னை
தாங்குவாள் என்ற
தன்னம்பிக்கையில்
தாவரங்களும் மரங்களும்
தலையசைத்து நிற்கின்றன...
சுற்றும் பூமிப்பந்து
என்றென்றும் சுழன்று
கொண்டே இருக்கும் என்ற
தன்னம்பிக்கையில் கலக்கமின்றி
இரவு பகலென உழலும்
இவ் வையம்....
தன்னம்பிக்கை...அது
வாழ்வின் ஆதாரம்....
மனிதனின் அசைக்க
முடியாத ஆயுதம் ...
எதிர் கொள்வோம்
வாழ்வை- புதிய
தன்னம்பிக்கையோடு...
======================================================
MULLAI :
இறைவன் தந்தான் இந்த வாழ்கை
அவன்மேலே வைத்தேன் ஒரு நம்பிக்கை
விதி விளையாடியது ஒரு வேடிக்கை
இனி இறக்கும் வரை என்மேலே ஒரு தன்னம்பிக்கை..!
======================================================
NEW_DUST :
கற்ற கல்வி கை விட்டாலும்,
பெற்ற செல்வம் சென்று விட்டாலும்,
உற்ற சொந்தங்கள் முகம் திருப்பினாலும்.,
உழுத நிலமாம், உன் நெஞ்சில்.,
தன்னம்பிக்கை எனும் வித்திட்டால்,
முயற்சி எனும் பூ பூக்கும்,
வெற்றி எனும் காய் காய்க்கும்,
மகிழ்ச்சி எனும் பழம் கிடைக்கும்.!
======================================================
SRUTHI :
யானைக்கு பலம் தும்பிக்கை
மனிதனுக்கு பலம் நம்பிக்கை
தும்பிக்கையுடன் இணைந்த தந்தம்
யானைக்கு மதிப்பு தருவது
நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை
மனிதனுக்கு மதிப்பு தருவது..
நம்மை விட்டு அனைத்தும் போனாலும்
தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் நமக்கு
என்றுமே வெற்றி தான் ...!
======================================================
KANCHANASUGI :
காலையில் இருந்து அரட்டைஅறைக்கு வர
நம்பிக்கை வைத்து இருந்தேன்..
ஆனால் இணையதளம் சதி செய்தது
தன்னம்பிக்கை இழக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ,
இப்போ வந்துட்டேனே ..!
======================================================
SANGEET 7 :
துயரங்கள் வரலாம்,
திருப்புமுனைகள் ஏற்படலாம்,
எதிர்பார்ப்புகள் கூடலாம்,
இலட்சியங்கள் மாறலாம் ,
இருப்பதும் இல்லாமல் போகலாம்,
அன்பிற்குரியோர் ஏமாற்றி செல்லலாம் ,
வெற்றிப்பாதை தடுமாறலாம் ,
தோல்வியே நிலையாய் இருக்கலாம் ,
உலகமே உன்னை பார்த்து
கைகொட்டி சிரித்தாலும்,
எதிர்த்து போராடும் தூண்டுகோல்..
தன்னம்பிக்கை...!!
======================================================
ARUNESH :
புற்றை கட்டும் எறும்புகளிடம் ..
வலை பின்னும் சிலந்திகளிடம் ..
இருக்கும் தன்னம்பிக்கை கூடவா.
உன்னிடம் இல்லை ..??
தன்னம்பிக்கை என்னும் ஊன்று கோலை எடு ..!
உன்னத வரலாறு படைக்க ....
உன் உள்ளத்தில் குறை இல்லையெல்
உன்னை வெல்ல யாரும் இல்லை
தன்னம்பிக்கை ஒன்று மட்டும் போதும்
தரணியெங்கும் உன்பெயர் வாழும் ..
சில நேரங்களில் ...
அவமானங்கள் கூட ..
வெற்றிக்கான பாதை அமைக்கும் ..
தன்னம்பிக்கை இருந்தால் ...
முன்னேறுவோம்..
முயற்சியே நமது தன்னம்பிக்கை..!
.
No comments:
Post a Comment